[X] Close

இலவசமாக காய்கறி கொடுக்க மறுத்த சிறுவனுக்கு சிறை!- விசாரணைக்கு உத்தரவு


boy-sent-to-jail-for-refusing-free-vegetables-to-cops-probe-ordered

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 Jun, 2018 10:33 am
  • அ+ அ-

பிஹார் மாநிலத்தில் போலீஸுக்கு இலவசமாக காய்கறி கொடுக்க மறுத்த சிறுவனை போலி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்ததாக வெளியான தகவல் குறித்து முதல்வர் நிதிஷ் குமார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிஹார் தலைநகர் பாட்னாவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து சீனியர் எஸ்பி மனு மகாராஜ், "இலவசமாக காய்கறி கொடுக்காததற்காக சிறுவனை போலீஸார் கைது செய்ததாக எழுந்த புகார் குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்.

ஆனால் எங்களுக்கு இதுவரை இத்தகைய சம்பவம் நடந்ததாக தகவல் ஏதும் வரவில்லை.

எனவே, புகார் தெரிவித்த சிறுவனின் பெறோரிடம் பேசவிருக்கிறோம். தவறு யார் செய்திருந்தாலும் தப்ப முடியாது" என்றார்.

நடந்தது என்ன?
போலீஸார் இப்படியான சம்பவம் குறித்த தகவலே தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று கூறினாலும் சிறுவனின் தந்தை சொல்வது வேறு மாதிரி இருக்கிறது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த சிறுவனின் தந்தை சுக்பால் சிங், "கடந்த மார்ச் 19-ம் தேதி என் மகன் வீடு திரும்பவில்லை. எனது மகனை போலீஸார் பிடித்துச் சென்றதாக சிலர் கூறினார்.

அங்குமிங்குமாக அலைந்து திரிந்து எனது மகனை பத்ரகார் நகர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர் என்பதைத் தெரிந்து கொண்டோம். நாங்கள் காரணம் கேட்டபோது மோட்டார் சைக்கிள் திருடியதற்காக எனது மகனைக் கைது செய்ததாகக் கூறினர். அவன் அவ்வாறு செய்திருக்கமாட்டான்.

மேலும், எனது மகனின் வயது 14. ஆதார் அட்டையிலும் அந்த வயதுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், போலீஸாரோ எனது மகனுக்கு 18 வயது என எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

சிறையில் எனது மகனை நான் சந்தித்தபோது போலீஸ்காரர்களுக்கு இலவசமாக காய்கறி கொடுக்க மறுத்ததால் தன்னை கைது செய்ததாகக் கூறினார்" என்றார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close