[X] Close

செல்ஃபி மோகத்தால் சோகம்: 500 அடி பள்ளத்தில் விழுந்து 33 வயது பெண் பலி


delhi-woman-taking-selfie-at-hill-station-in-maharashtra-falls-500-feet

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 Jun, 2018 15:47 pm
  • அ+ அ-

செல்ஃபி மோகத்தால் உயிர்ப்பலிகள் வாடிக்கையாகிவிட்டது. கடந்த திங்கள் கிழமை வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள பாகா கடற்கரைக்கு சுற்றுலா சென்றவர்கள் பாறை ஒன்றில் அமர்ந்து செல்ஃபி எடுத்துக்கொள்ளும்போது அலை தாக்கியதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கடலில் விழுந்து இறந்தார்.

அன்றைய தினமே மும்பை மரைன் ட்ரைவ் பகுதியில் செல்ஃபி எடுத்த சிறுவன் கடலில் மூழ்கி இறந்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மதேரன் பகுதியில் சுற்றுலா மேற்கொண்டிருந்த டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுத்தபோது 500 அடி பள்ளத்தில் விழுந்து பலியாகியுள்ளார்.

இது குறித்து மதேரன் கூடுதல் எஸ்.பி., கூறும்போது, "டெலியைச் சேர்ந்த சரிதா ராம்மகேஷ் சவுகான் குடும்பத்துடன் சுற்றுலா வந்திருக்கிறார். நேற்று மதேரனில் உள்ள காலனி ஆதிக்கத்தின்போது கட்டப்பட்ட கோட்டைகளைப் பார்ப்பதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். லூயிசா பாயின்ட் என்ற பகுதியில் குடும்பத்தினர் அனைவருமே செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளனர். அப்போது சரிதா கால் தவறி 500 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார். இது குறித்து எங்களுக்குப் புகார் கொடுக்கப்பட்டது. உள்ளூர் மக்களின் உதவியுடன் சரிதாவின் சடலத்தை மீட்டோம். பிரேதப் பரிசோதனை முடித்து உடல் குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கப்பட்டது" என்றார்.

வாஷிங்டன் போஸ்ட் செய்தி அறிக்கையில் 2015-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி உலகில் பதிவான செல்ஃபி மரணங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவிலேயே நிகழ்ந்திருக்கின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close