[X] Close

லிப்ஸ்டிக் சிறுவன்: அன்பைப் பொழிந்த அக்கா; ஆதரவுக்கரம் நீட்டிய ட்விட்டராட்டிகள்


allahabad-boy-9-bullied-for-wearing-lipstick-then-his-cousins-did-this

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 Jun, 2018 15:24 pm
  • அ+ அ-

பாலினம் என்பது ஒரு மாயை அதைக் கடந்து வா என  லிப்ஸ்டிக் பூசிக்கொண்டதால் ஒடுக்கப்பட்ட 9 வயது சிறுவனுக்கு அவனது அக்கா ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

ட்விட்டரில் இன்றைய ட்ரென்டில் இடம்பிடித்திருக்கிறார் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவர். அந்தச் சிறுவனுக்கு லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ள நெயில்பாலிஷ் பூசிக்கொள்ள எப்போதுமே விருப்பமுண்டு.

ஆனால் ஒவ்வொரு முறையும் அவனை அவனது அம்மா, தாத்தா என வீட்டுப் பெரியவர்கள் சரமாரியாக வசை பாடியுள்ளனர். இதனால், சிறுவன் எப்போதுமே மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். அப்படித்தான் நேற்றுமுன் தினம் அச்சிறுவன் லிப்ஸ்டிக் பூசியிருக்கிறார். இதற்காக வீட்டிலுள்ளவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறார்.

இதனையடுத்து இன்று அவரது அக்கா முறையில் உள்ள பெண் ஒருவர் சிறுவனுக்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார்.

பிஜ்லானி தீக்‌ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் "எனது வீட்டிலேயே மிகுந்த பெண் தன்மையுள்ளவர் எனது ஒன்றுவிட்ட சகோதரன். அவனுக்கு நெயில்பாலிஷ் பிடிக்கும். மனையியல் படிக்க இன்னும் அதிகமாக பிடிக்கும். ஆனால், இதற்காக அவனை குடும்பத்தினர் தரம்தாழ்ந்து விமர்சிக்கின்றனர்.

பாலினம் சார்ந்து விமர்சிக்கப்படுகிறார். அண்மையில் அவன் சிவப்பு லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டதற்காக அவனைமீது தரக்குறைவாக திட்டியுள்ளனர். அதனால் அவன் இப்போதெல்லாம் திரைசீலைகளுக்குப் பின்னும் படுக்கைக்கு அடியிலும் மறைந்து கொள்கிறான். அப்போதுதான் அவனது அம்மாவால் அவன் லிப்ஸ்டிக் பூச்சைக் கண்டுபிடிக்க முடியாது.

அந்தச் சிறுவனுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக என்னைப்போன்ற வீட்டிலுள்ள அண்ணன் தம்பி அக்கா தங்கைகள் அனைவரும் சிவப்பு லிப்ஸ்டிக் பூசிக் கொண்டுள்ளோம். எனது பெரிய அண்ணனும் சிவப்பு லிப்ஸ்டிக் பூசிக் கொண்டுள்ளார். இதனால் சிறுவன் இப்போது உற்சாகத்துடன் இருக்கிறான்" என்று அடுத்தடுத்த ட்வீட்களில் பதிவு செய்திருந்தார். தீக்‌ஷா அவரது சகோதரருடன் சிவப்பு லிப்ஸ்டிக் பூசி எடுத்துக்கொண்ட ஃபோட்டோ வைரலாகி வருகிறது. இதுவரை 4000-க்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளன.

அவரது இந்த போட்டோவுக்கு மட்டுமல்ல கடைசியாக பாலின பாகுபாட்டை உடைத்தெறியும் வகையில் அவர் பதிவு செய்த ட்வீட்டுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. "பாலினம் என்பது ஒரு வகை நிறமாலை போன்றது. உங்கள் குழந்தைகளுக்கு இதை சொல்லிக் கொடுங்கள். குழந்தைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். பாலினப் பாகுபாடு காட்டாதீர்கள். பாலினம் சார்ந்து அவர்களை துன்புறுத்தாதீர்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close