[X] Close
 

அவர் எனக்கு ராமர்: மோடியின் மனைவி உருக்கம்


he-s-ram-for-me-pm-s-wife-rebuts-anandiben-patel-on-marital-status

  • பாரதி
  • Posted: 21 Jun, 2018 09:51 am
  • அ+ அ-

அவர் எனக்கு ராமர்; நான்தான் அவரது மனைவி, இதை அவரே வேட்புமனுவில் தெரிவித்திருக்கிறார் என பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் படேல் தெரிவித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேச அளுநரும் குஜராத் முன்னாள் முதல்வருமான ஆனந்திபென் படேல் குஜராத்திலிருந்து வெளிவரும் திவ்ய பாஸ்கர் என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி திருமணமாகாதவர் எனக் கூறியிருந்தார்.
இந்தப் பேட்டி சமூகவலைதளங்களில் பிரபலமானது. இந்நிலையில், ஆனந்திபென் படேலுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென் படேல் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தனது சகோதரர் அசோக் மோடியின் மொபைல் போனிலிருந்து வீடியோ எடுத்து ஆனந்தி பெண் பேட்டிக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் ஜசோதா பென். "ஆனந்திப்பென் படேலின் பேச்சு எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. ஊடகப் பேட்டியில் நரேந்திராவுக்கு திருமணமாகவில்லை என அவர் கூறியிருக்கிறார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தபோதே மோடி எனது பெயரைப் பதிவு செய்திருக்கிறார். ஆனந்திபென் போன்ற கற்றறிந்த பெண் ஒருவரே என்னைப் போன்ற ஆசிரியரைப் பற்றி இப்படிப் பேசியிருப்பது சரியல்ல. அவரது பேச்சு என்னைமட்டுமல்ல இத்தேசத்தில் பிரதமரின் பிம்பத்தையும் களங்கப்படுத்தியிருக்கிறது. மோடி எனது மரியாதைக்குரியவர். அவர் எனக்கு ராமர்" எனப் பேசியுள்ளார்.

இது குறித்து ஜசோதாவின் சகோதரர் அசோக் மோடி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில் வீடியோவில் பேசியிருப்பது ஜசோதா பென் என்பதை உறுதி செய்தார்.

"ஆனந்தி பென்னின் பேட்டி குறித்து சமூகவலைதளங்களில் படித்தபோதுகூட நாங்கள் நம்பவில்லை. ஆனால், திவ்ய பாஸ்கர் பத்திரிகையில் பார்த்தபோதுதான் நாங்கள் அதை நம்பினோம். அதன் காரணமாகவே விளக்கமளிக்க முடிவு செய்தோம். நாங்கள் இருவரும் ஒரு விளக்கத்தை எழுதினோம். அதை ஜசோதா பென் பேச எனது செல்போனில் வீடியோ எடுத்தோம்" என அசோக் மோடி கூறினார்.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close