[X] Close
 

மத்தியப் பிரதேசம் வளம் பெற பசு அமைச்சகம்: யோசனை கூறும் சாமியார்


swami-given-cabinet-rank-wants-cow-ministry-for-golden-madhya-pradesh

  • பாரதி
  • Posted: 20 Jun, 2018 15:56 pm
  • அ+ அ-

மத்தியப் பிரதேச மாநிலம் வளம் பெற பசு அமைச்சகத்தை முதல்வர் சிவ்ராஜ் சவுகான் அமைக்க வேண்டும் என அம்மாநில பசு பாதுகாப்பு வாரிய சேர்மன் அகிலேஷ்வரநந்த கிரி வலியுறுத்தியுள்ளார். அடிப்படையில் சாமியாரான இவருக்கு பசு பாதுகாப்பு வாரிய சேர்மன் பதவியை ம.பி. அரசு வழங்கி கவுரவித்தது.

இவருடன் கம்ப்யூட்டர் பாபா என அழைக்கப்படும் நம்தேவ் தியாகி, பண்டிட் யோகேந்திர மஹந்த், சுவாமி ஹரிஹரானந்த்ஜி, நர்மதானந்த்ஜி ஆகியோருக்கும் கவுரவ பொறுப்புகளை வழங்கியது மத்தியப் பிரதேச அரசு. கடந்த வாரம் அகிலேஷ்வரநந்த கிரி  காபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு பதவி உயர்த்தப்பட்டார்.

இந்நிலையில், மாநிலம் நலம் வளம் பெற பசு அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதை நியாயப்படுத்தும் விதம் பேசிய அவர், "ராஜஸ்தானில் கோசேவா இயக்குநரகம் இருக்கிறது என்றால், மகிழ்ச்சி துறை என்ற ஒன்றை ம.பி.,யில் சவுகான் உருவாக்க முடியும் என்றால் பசு அமைச்சகம் அமைப்பதும் மக்கள் நலனுக்காகவே" என்று கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுகான் தனது வீட்டில் பசுக்களைப் பேணுவதுபோல் மத்தியப் பிரதேசத்தில் பசு அமைச்சரவை அமைத்தால் அது மற்ற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக அமையும் என அவர் கூறியுள்ளார். பசுவை விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close