[X] Close
 

ஆசிரியர் பணிக்கு ஏன் ஆபாசக் கேள்வி?- ஒரு திருநங்கையின் வேதனைப் பகிர்வு


at-kolkata-school-interviews-transgender-teacher-asked-about-sexuality

  • பாரதி
  • Posted: 20 Jun, 2018 11:34 am
  • அ+ அ-

கொல்கத்தாவைச் சேர்ந்த சுசித்ரா டே ஆங்கிலம், புவியியல் என இரண்டு பாடங்களில் முதுகலை பட்டம் படித்திருக்கிறார். சுசித்ராவுக்கு 30 வயதாகிறது. ஆசிரியராக வேண்டும் என்பதே அவரது கனவு. ஆனால், அவரது கனவுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது அவரது பாலினம்.

மூன்றாம் பாலினத்தவரான சுசித்ரா சமூகத்தில் தனக்கென கவுரமான இடத்தைப் பெற வேண்டும் என்று ஆசிரியர் பணி தேடி வருகிறார்.

ஆனால், இதுவரை அவர் வேலை கேட்டுச் சென்ற மிகப்பெரிய பள்ளிகளின் முதல்வர்கள்கூட அவரை மிகத் தரக்குறைவாக நடத்தியுள்ளனர். இத்தனைக்கும் சுசித்ராவுக்கு ஆசிரியர் பணியில் 10 ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது. தனது வேலை தேடும் படலத்தின் அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார். 

சுசித்ரா கூறியதாவது: 
ஒரு பிரபல பள்ளிக்கூடத்தின் ஆண் முதல்வர், "ஒரு ஆணுடன் உறவு கொண்டால் என்னால் கருத்தரிக்க முடியுமா?" என்று கேட்டார். இன்னொரு மிகப்பெரிய பள்ளியின் பெண் முதல்வர் எனக்கு வேலை வேண்டுமானால் எனது திருநங்கை அடையாளத்தை மறைக்க வேண்டும் என்றார்.

இவர்கள் மட்டுமல்ல தான் வேலைதேடிச் சென்ற பல்வேறு பள்ளிக்கூடங்களின் முதல்வர்களும் தாளாளர்களும் என்னிடம் மனம் புண்படும் கேள்விகளை டீச்சர் வேலைக்கு சம்பந்தம் இல்லாத கேள்விகள் பாலியல் தொடர்பான கேள்விகளைக் கேட்டுத் துன்புறுத்தியுள்ளனர் எனக் கூறியுள்ளார்.

சுசித்ராவின் கேள்வி..
"ஒரு திருநங்கை மீதான இந்த சமூகத்தின் பார்வை இன்னும் சிறிதும் மாறவில்லை. ஆசிரியர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கு சிற்பிகள். ஆனால், படித்தவர்களே இத்தகைய மனோபாவத்துடன் இருந்தால் மற்றவர்கள் மனநிலை என்னவாக இருக்கும். என்னைப் போன்ற பாலின சிறுபான்மையினரை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள நன்கு படித்த திருநங்கைகளில் நானும் ஒருவர் என்ற முறையில் மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணையத்தின் தலையீட்டைக் கோரி கடிதம் எழுதியிருக்கிறேன்.

எனது தாய்க்கு வயதாகிவிட்டது. முதுமையில் வாடும் அவரைக் காக்க எனக்கு ஒரு வேலை வேண்டும். சமுகத்தின் அனைத்து தரப்பினரும் எங்களை ஒதுக்கினால் நாங்கள் எங்குதான் வாழ்வோம்" என சுசித்ரா சமூகத்துக்கு வலுவான கேள்வியை முன்வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close