[X] Close

குழந்தைக்கு பெயர் சூட்ட தேர்தல் நடத்திய மகாராஷ்டிரா தம்பதி


this-maharashtra-couple-held-election-to-choose-baby-s-name

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Jun, 2018 09:43 am
  • அ+ அ-

தங்கள் மகனுக்கு பெயர் சூட்ட தேர்தல் நடத்தி பெயரைத் தேர்வு செய்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி. மகாராஷ்டிரா மாநிலம் கோண்டிய மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி மிதுன் - மன்ஸி. இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தந்தை மிதுனுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை அதிகம். ஜோதிடரோ மிதுன் - மன்ஸி தம்பதியின் குழந்தை எதிர்காலத்தில் அரசியல் தலைவராக வருவார் எனக் கூறியிருக்கின்றனர்.

இதனால், மிதுன் மகனுக்கு சிறந்த பெயரைத் தெரிவு செய்யும் முயற்சியில் இறங்கினார். பல பெயர்களை யோசித்து இறுதியில் மூன்று பெயர்களை மிதுன் தேர்வு செய்தார். ஆனால் அந்த மூன்றில் எந்தப் பெயரை மகனுக்கு சூட்டுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

ஜோதிடர் மகன் எதிர்காலத்தில் அரசியல் தலைவராக வருவார் எனக் கூறியதால், மகனுக்கு பெயர் தேர்வு செய்ய தேர்தல் நடத்தியிருக்கிறார். உறவினர்களும் நண்பர்களும்தான் வாக்காளர்கள். மூன்று பெயர்களில் அதிகம் வாக்கு பெற்ற பெயர் குழந்தைக்கு சூட்டப்படும் என்று அறிவித்தார். யக்‌ஷா, யோவிக், யுவன் என்ற மூன்று பெயர்களையும் நோட்டீஸ்களாக அச்சடித்தார். பின்னர் வாக்குப் பெட்டி ஒன்றை தயார் செய்தார். மூன்று பெயர்களையும் பிரபலப்படுத்தும் வகையில் பதாகைகள்கூட வைத்தார். ஒரு மினி தேர்தல் போல் ஜூன் 15-ம் தேதி வாக்குப்பதிவு நடந்துள்ளது. இறுதியில் யுவன் என்ற பெயருக்கே அதிக வாக்குகள் விழுந்தன. குழந்தைக்கு யுவன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேசிய மிதுன் பாங், "எனது மகன் அரசியல் தலைவராக வாய்ப்புள்ளதாக ஜோதிடர் சொன்னார். அதன் காரணமாகவே எங்கள் குழந்தைக்கு தேர்தல் நடத்தி பெயர் முடிவு செய்தோம். 15, 20 ஆண்டுகள் கடந்தாலும்கூட இந்த சம்பவம் மகிழ்ச்சியுடன் நினைவுகூரத்தக்கதாக இருக்கும்" என்றார்.

குழந்தையின் அத்தை கூறும்போது, "நான் வாக்களித்த பெயர்தான் எனது மருமகனுக்கு சூட்டப்பட்டுள்ளது. இதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. இந்த சம்பத்தை எங்கள் ஒட்டுமொத்தக் குடும்பமும் எப்போதுமே நினைவில் வைத்துக் கொண்டாடும்" என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close