[X] Close

இந்தியாவுக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல்: பாஜக பயிற்சி புத்தகத்தில் தகவல்


china-is-a-threat-to-india-message-in-bjp-cadres-training-manual

  • பாரதி ஆனந்த்
  • Posted: 18 Jun, 2018 13:53 pm
  • அ+ அ-

இந்தியாவுக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக பாஜகவின் பயிற்சி புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவில் புதிதாக இணையும் தொண்டர்களுக்கான கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கையேட்டை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கடந்த செப்டம்பர் 13-ம் தேதி வெளியிட்டார். இந்த கையேட்டில், இந்தியாவுக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சீனாவும் பாகிஸ்தானும் அனு ஆயுதங்களை வைத்துள்ளன. சர்வதேச சக்தியாக இந்தியா உருவெடுப்பதை விரும்பாத சீனாவும் பாகிஸ்தானும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன" என அந்த கையேட்டில் எழுதப்பட்டிருக்கிறது. தேசத்துக்கான சவால்கள் என்ற அத்தியாத்தில்தான் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது. மேலும், சீனா கொள்கை ரீதியாக இந்தியாவுக்கு சவால் விடுப்பதாகவும் பாகிஸ்தான் தொடர்ந்து தேச ஒற்றுமையை சீர்குலைப்பதில் கவனம் செலுத்தியும் பொருளாதாரத்தை சிதைக்கும் வேலை செய்தும் சவால் விடுப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் பாஜகவின் மகளிரணிக்கு, விவசாயிகள் பிரிவுக்கு என தனித்தனி கையேடுகள் தயரிக்கப்பட்டுள்ளன. 


நேரில் சமரசம் புத்தகத்தில் குற்றச்சாட்டு..
சீனாவுடன் நல்லுறவைப் பேண அவ்வப்போது பேச்சுவார்த்தையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால், மத்தியில் ஆளும் பாஜகவின் தொண்டர்களுக்கான கையேட்டிலோ, "இந்தியாவுடனான உறவுச் சிக்கலைத் தீர்க்க சீனா விரும்பவில்லை.

1962-க்குப் பின்னர் இந்தியா - சீனா எல்லையில் துப்பாக்கிச் சூடு நடைபெறவில்லை என்றாலும்கூட சீனா எல்லையில் எப்போதுமே ஆயுதங்களை குவித்து வைக்கிறது. பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் சீனா உதவிகளைச் செய்து நம்மை சுற்றிலும் தனது படைகளை வலுப்படுத்தப் பார்க்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியா மீது சைபர் குற்றங்களை சீனா கட்டவிழ்த்துவிடுகிறது. அண்மைக்காலங்களில் நமது வெப்சைட்டுகளை சீனா அதிக முறை ஊடுருவியுள்ளது.

மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவளித்து நமக்கு எதிராகத் தூண்டிவிடுகிறது" என அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதேபோல் பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாத முகாம்களை ஊக்குவித்து இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ உதவுவதாகவும் தெரிவித்துள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close