[X] Close
 

செல்ஃபி எடுக்கும்போது பரிதாபம்: கோவா சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த இருவர் மரணம்


goa-beach-accidents-tn-tourists-death

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 18 Jun, 2018 13:34 pm
  • அ+ அ-

தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு சுற்றுலா பயணிகள், கோவா கடற்கரையில் செல்ஃபி எடுக்க முயற்சித்தபோது கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். 

கர்நாடகம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 8 சுற்றுலா பயணிகள் அடங்கிய குழு, வடக்கு கோவாவில் இருக்கும் பாகா கடற்கரைக்கு சனிக்கிழமை அன்று சென்றுள்ளனர். 

அந்த குழுவில் 3 பேர், கடலில் இருக்கும் பாறைகள் அருகில் செல்ஃபி புகைப்படங்கள் எடுப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது வலுவான கடல் அலை ஒன்று பாறையில் இருந்த இவர்கள் மீது மோதியுள்ளது. இருவர் நீந்தி தப்பித்துவிட்டாலும், மூன்றாம் நபர் கடலில் மூழ்கி உயிரிழிந்தார். உயிரிழந்தவர் வேலூரைச் சேர்ந்த, 28 வயதான, தினேஷ்குமார் ரங்கநாதன் என்பது தெரியவந்துள்ளது. 

இதே போன்ற மற்றொரு சம்பவத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 4 சுற்றுலா பயணிகள், வடக்கு கோவாவின் அகுவாடா கோட்டைக்கு அருகிலுள்ள சென்குரிம் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். கரைக்கு அருகே உள்ள பாறையில் அமர்ந்து நால்வரும் தங்கள் மொபைல் போன்களில் புகைப்படம் எடுக்க முயற்சித்தபோது வலுவான அலை அடித்ததில் நால்வரும் மூழ்கினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 33 வயதான சசிகுமார் வாசன் என்பவர் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். 

இறந்த இருவரது உடல்களும் மீட்கப்பட்டு உடல் பரிசோதனைக்காக கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கோவாவில் பருவமழைக் காலம். எனவே கடற்கரைகளில் நீச்சல் மற்றும் இதர நீர் சாகச / விளையாட்டு நடவடிக்கைகளுக்கு மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தடை விதித்துள்ளது. மேலும், கடந்த மாதமே, கோவா அரசாங்கம், ஜூன் 1 தொடங்கு 4 மாதங்கள் வரை யாரும் கடலில் நீந்த வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- பிடிஐ

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close