[X] Close

கவுரி லங்கேஷ் படுகொலையும் பிரமோத் முதாலிக்கின் சர்ச்சை பேச்சும்


should-pm-react-if-dog-dies-pramod-muthalik-on-gauri-lankesh-killing

  • பாரதி ஆனந்த்
  • Posted: 18 Jun, 2018 12:35 pm
  • அ+ அ-

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முதாலிக் "காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகாவில் இரண்டு கொலைகள் நடந்தன.

மகாராஷ்டிராவில் இரண்டு கொலைகள் நடந்தன.  யாருமே காங்கிரஸ் அரசின் தோல்வி குறித்து பேசவில்லை. ஆனால், கவுரி லங்கேஷ் படுகொலையில் பிரதமர் ஏன் மவுனம் காக்கிறார் எனக் கேட்கின்றனர். கர்நாடகாவில் ஏதோ ஒரு நாய் இறந்தால் பிரதமர் ஏன் அதற்கு கருத்து கூற வேண்டும்" என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.

ஆப்பரேஷன் அம்மா..
பெங்களூருவை சேர்ந்த பத்திரிகையாளரும், இந்துத்துவ எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ் (55) கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்த பரசுராம் வாக்மோர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆப்பரேஷன் அம்மா என்ற பெயரில் கவுரி லங்கேஷை கொல்ல திட்டம் தீட்டப்பட்டதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பரசுராம் வாக்மோர், "இந்து மதத்தைக் காக்க ஒரு பெண்ணை கொலை செய்ய வேண்டும் என பணிக்கப்பட்டது. நானும் ஒப்புக் கொண்டேன். ஆனால் நான் கொல்லப்போகும் நபர் யார் என்று எனக்குத் தெரியாது. கவுரி லங்கேஷை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது" எனக் கூறினார்.

கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் இந்துத்துவ அமைப்பினர் 6 பேர் கைது செய்யப்பட்டதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம், ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ஆனால், பரசுராம் வாக்மோர், ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் உடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. "தினமும் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்கும் என்னுடன் ஆயிரக்கணக்கானோர் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை" எனக் கூறினார்.
அந்த சர்ச்சை அடங்குவதற்குள்ளதாகவே கவுரி லிங்கேஷை தரக்குறைவாக விமர்சித்து மற்றொரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் பிரமோத் முதாலிக்.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close