[X] Close
 

மார்பளவு வெள்ளத்தில் மூழ்கி மக்களை மீட்ட மணிப்பூர் ஐஏஎஸ் அதிகாரி: நெட்டிசன்கள் புகழாரம்


manipur-ias-officer-for-leading-the-flood-rescue-in-deep-water

  • kamadenu
  • Posted: 16 Jun, 2018 17:13 pm
  • அ+ அ-

குறித்த காலத்திற்கு முன்னதாகவே சில வடகிழக்கு மாநிலங்களில் பருவமழை துவங்கிவிட்டது. பல பகுதிகளில் கனமழை காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன. இதனால், ஏழு வடகிழக்கு மாநிலங்களிலும் அதிகாரிகள் வெள்ளத் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளம் காரணமாக பலரும் வீடற்றவர்களாகி இருக்கின்றனர்.

இயற்கை பேரிடர்களால் வேதனைக்குரிய செய்திகளே நம் காதில் கேட்டுக் கொண்டிருந்தாலும் அதில் ஒரு செய்தி மனநிறைவைத் தருகிறது. மணிப்பூரில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனால், பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் அங்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதில், ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் வெள்ளத்தில் இறங்கி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதனால், அவரை பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். 

திலீப் சிங் என்ற அந்த ஐஏஎஸ் அதிகாரி, இம்பாலில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டார். மர்பளவு வெள்ளத்தில் மூழ்கி அவர் மீட்பு பணிகளை மேற்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

இந்த புகைப்படங்களை முதலில் பகிர்ந்தவர் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தான். 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close