[X] Close
 

சொன்னது என்னாச்சு?- பிரதமருக்கு வாக்குறுதியை நினைவுபடுத்த 1350 கி.மீ., தூரம் நடந்த இளைஞர்


man-walks-from-odisha-to-delhi-to-remind-pm-of-his-promises

  • பாரதி
  • Posted: 16 Jun, 2018 10:46 am
  • அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியை அவருக்கு நினைவுபடுத்துவதற்காக ஒடிசாவில் இருந்து டெல்லிவரை 1350 கி.மீ., தூரம் நடந்து சென்றார் இளைஞர் ஒருவர்.

ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலா மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர் முக்திகாந்த். தொழில்ரீதியாக சிலை வடிவமைப்பாளரான இவர் கையில் தேசியக் கொடியை ஏந்தியடி நடைப்பயணம் மேற்கொண்டார். ஒடிசாவில் புறப்பட்ட அவர் டெல்லி வந்தடைந்தார். தனது கிராமமக்களுக்கு மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து முக்திநாத் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம், "கடந்த 2015-ம் ஆண்டும் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா வந்தார். அப்போது அவர் இஸ்பாத் பொது மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் எனக் கூறியிருந்தார். அதேபோல் பிராம்மணி பாலம் கட்டி முடிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

ஆனால், 4 வருடங்கள் ஆகியும் இதுவரை ஏதும் செய்யப்படவில்லை. நான் பிரதமரைச் சந்தித்து அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வலியுறுத்தப்போகிறேஎன். பிராமணி மேம்பாலத்தைக் கட்டி முடிக்குமாறும் ரூர்கேலா இஸ்பாத் மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக விரைவில் மாற்றுமாறும் வேண்டுகோள் விடுக்கப்போகிறேன்.
இஸ்பாத் மருத்துவமனைதான் ரூர்கேலா மக்களுக்கு உயிர்நாடி. ஆனால், அந்த மருத்துவமனை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. மக்கள் அன்றாடம் மடிகின்றனர். கடந்த 4 வருடங்களாக பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டாலும் இந்த ஆண்டு பிரதமர் ஏதாவது செய்வார் என நான் நம்புகிறேன்" என்றார்.

ஆக்ரா ஹைவே அருகே வந்தபோது முக்திகாந்த் மயங்கி விழுந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் எப்படியாவது தனது நடைப்பயணத்தை முடித்து பிரதமரை சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close