[X] Close

மே.வங்கத்தில் வசிப்பவர்கள் பெங்காலி கற்க வேண்டும்: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 15 Jun, 2019 07:57 am
  • அ+ அ-

மேற்கு வங்கத்தின் கான்ஜ்ராபாரா என்ற இடத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் மருத்துவர்களின் போராட்டத்தை வெளி மாநிலத்தவர்கள் தூண்டி வருகின்றனர். கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு நான் ஆய்வுசெய்யச் சென்றபோது, அங்கு மருத்துவர்களுடன் வெளி மாநிலத்தவர்களும் போராட்டத்தை ஈடுபட்டிருந்ததை நான் பார்த்தேன்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திர மோசடி மூலம் சில இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பெங்காலிகள் மற்றும் சிறுபான்மையினரை தாக்கலாம் என பாஜக கருதினால் அதனை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். குண்டர்களுக்கு எதிராக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும். மேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள்- ஆணோ அல்லது பெண்ணோ அவர்கள் பெங்காலியில் பேச கற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மம்தா பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close