[X] Close
 

பல்கலைக்கழகத்தில் பாலியல் தொந்தரவா?- மாணவிகள் ராஜ்பவனுக்கே புகார் செய்யலாம்


girls-can-report-campus-harassment-directly-to-raj-bhavan

  • பாரதி
  • Posted: 15 Jun, 2018 15:54 pm
  • அ+ அ-

பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் தொந்தரவு இருந்தால் மாணவிகள் நேரடியாக ராஜ்பவனுக்கே புகார் செய்யலாம் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அவசரப்படாதீர்கள். உத்தரவிட்டது தமிழக ஆளுநர் அல்ல. பிஹார் ஆளுநர் சத்யபால்.

பிஹார் பல்கலைக்கழக மாணவ அமைப்புகளின் நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். 

விழாவில், ஆளுநர் கூறியதாவது:
பெண்களின் மாண்பைப் பேணுவது நமது தர்மம். பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகள் தங்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல்களை நேரடியாக ராஜ்பவனுக்கு புகாராகத் தெரிவிக்கலாம். போலீஸுக்கு செல்வதற்கு முன்னரே அவர்கள் புகாரைத் தெரிவிக்கலாம்.
ஆளுநர் மாளிகையில் இதற்காக பிரத்யேகமாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிரத்யேக தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. புகார் கிடைக்கப்பெற்றவுடனேயே அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வர். போலீஸில் புகார் அளிக்கக்கூட உதவுவர்.
பிஹார் அரசு மாணவிகளின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக வளாகங்களிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close