[X] Close

வீர மரணம் அடைந்தவரின் சகோதரி திருமணத்தை நடத்தி வைத்த சக வீரர்கள்


  • kamadenu
  • Posted: 15 Jun, 2019 07:59 am
  • அ+ அ-

பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த விமானப்படை கமாண்டோ வீரர் ஜோதி பிரகாஷ் நிராலா. இவர் காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்தார். ஜோதி பிரகாஷ் நிராலாவின் மரணத்துக்குப் பிறகு அவருக்கு உயரிய விருதான அசோக சக்ரா விருது 2018-ம் ஆண்டு குடியரசுதின விழாவின்போது வழங்கப்பட்டது.

வீர மரணம் அடைந்த நிராலாவின் குடும்பத்தில் அவரது பெற்றோருக்கு அவர் ஒரே மகன். 4 சகோதரிகள். நிராலா இறந்ததால் அவரது குடும்பம் பொருளாதார நெருக்கடியில் தவித்தது.

அவரது சகோதரி சசிகலா வுக்கு திருமணம் செய்ய முடி யாமல் குடும்பத்தினர் கலங்கினர். இதையறிந்த நிராலாவுடன் பணி யாற்றிய சக வீரர்கள் அவரது சகோதரிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். வீரர் கள் ஒவ்வொருவரும் 500 ரூபாய் வீதம் தங்கள் பங்காக அளித்துள் ளனர். இதன் மூலம் சுமார் ரூ.5 லட்சம் நிதி சேர்ந்துள்ளது. இதை வைத்து நிரலாவின் சகோதரி திருமணத்தை தங்கள் சகோதரியின் திருமணம் போல நடத்திவைத்துள்ளனர்.

மேலும், இறந்த வீரருக்கு தங்கள் மரியாதையை தெரிவிக் கும் வகையில் சில வீரர்கள் தரை யில் தங்களது கைகளை வைத்து உள்ளங்கை மீது மணமகளான அந்த சகோதரியை நடக்கச் செய் துள்ளனர்.

இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீர மரணம் அடைந்த வீரரின் சகோதரி திருமணத்தை தங்களது சகோதரியின் திரும ணம் போல நடத்திவைத்த வீரர் களுக்கு பாராட்டு குவிகின்றன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close