[X] Close
 

ரயில்வே உணவு, சேவையின் தரம் எப்படி?- களத்தில் மஃப்டி கண்காணிப்பாளர்கள்


undercover-men-to-check-food-services-offered-in-trains

  • பாரதி
  • Posted: 15 Jun, 2018 15:09 pm
  • அ+ அ-

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே தனது தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் உள்ள உணவுகள் தரமற்றதாக இருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் பைலட் திட்டமாக குறிப்பிட்ட ரயில்களில் சமையலறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தி தரத்தை நேரலையில் கண்காணிக்க முடிவு செய்தது.

அந்த வரிசையில், ரயில்களில் மஃப்டியில் (சாதாரண உடையில்) கண்காளிப்பாளர்களைப் பயணிக்கச் செய்து, ரயிலில் வழங்கப்படும் உணவின் தரம், ஊழியர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை கணிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சாதாரணப் பயணியைப் போல் பயணிக்கும் இந்த அண்டர்கவர் ஊழியர்கள், உணவை காசு கொடுத்து வாங்கி உணவின் தரம் குறித்து பின்னூட்டம் அளிப்பார்கள். அதேபோல் ரயிலில் உள்ள அடிப்படை வசதி, ஊழியர்கள் நடந்துகொள்ளும் விதமும் கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அண்டர்கவர் ஊழியர்கள் தங்கள் அறிக்கையை ரயில்வே நிர்வாகத்திடம் சமர்பிப்பர். அதேவேளையில் இந்தப் பணியின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் விதமாக அண்டர்கவர் ஊழியர்களின் அடையாளம் ஒருபோதும் வெளியிடப்படாத என ரயில்வே நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close