[X] Close

கர்நாடகாவில் புதிய அமைச்சர்களாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் பதவியேற்பு


2

  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 15:01 pm
  • அ+ அ-

கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. சுயேச்சை எம்எல்ஏக்கள் இருவர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கர்நாடாகவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சரவை பங்கீடு, துறை ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் இரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. அமைச்சர் பதவி கிடைக்காத ரமேஷ் ஜார்கிஹோளி, ரோஷன் பெய்க், சுதாகர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலரிடம் பாஜக தரப்பில் தங்கள் கட்சியை ஆதரிக்குமாறு குதிரை பேரம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் பணியில் முதல்வர் குமாரசாமி இறங்கியுனார்.

min.JPG 

அதன்படி, மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடம் சுயேச்சை எம்எல்ஏவுக்கும், காங்கிரஸின் ஒரு இடம் மற்றொரு சுயேச்சைக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ராணிபென்னூர் ஆர்.சங்கர், முல்பாகல் நாகேஷ் ஆகிய இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பெங்களூரு ராஜ்பவனில், நடந்த நிகழ்ச்சியில் அவர்களுக்கு ஆளுநர்  வஜுபாய் வாலா, பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close