[X] Close

கவுரவ பிரச்சினையாக்காதீர்கள்: மம்தா பானர்ஜிக்கு ஹர்ஷவர்த்தன் வேண்டுகோள்


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 14:43 pm
  • அ+ அ-

மேற்குவங்கத்தில் நடக்கும் மருத்துவர்கள் போராட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி கவுரவ பிரச்சினையாக கருதக்கூடாது, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் வலியுறுத்தியுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள மருத்தவகல்லூரி மருத்துவமனையில் திங்களன்று நோயாளியின் உறவினர் ஒருவர் பயிற்சி மருத்துவர் ஒருவரை தாக்கினார். இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி திங்கள் முதல் அரசு பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயிற்சி மருத்தவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால், அம்மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனை இன்று சந்தித்தனர். அப்போது மருத்துவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் சமூக தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேற்குவங்க மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாடுமுழுவதும் போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். மக்களின் உயிர்காக்கும் பணியில் உள்ள மருத்துவர்கள் தங்கள் கோரிக்கைக்காக அடையாள போராட்டங்களில் ஈடுபடலாம். ஆனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் நோயாளிகள் பாதிக்கப்படுவர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை கொதிப்படைய செய்யும் வகையில் பேசுவதை முதல்வர் மம்தா பானர்ஜி தவிர்க்க வேண்டும். கவுரவ பிரச்சினையாக கருதக்கூடாது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close