[X] Close

கேரளா, மேற்குவங்கத்தில் கவனம் செலுத்துங்கள்: பாஜக நிர்வாகிகளுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 12:29 pm
  • அ+ அ-

கேரளா, மேற்குவங்க மாநிலங்களில் பாஜக வளர்ச்சியடைய வாய்ப்புகள் இருப்பதால் அந்த மாநிலங்களில் கட்சி நிர்வாகிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அக்கட்சியின் தலைவர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரம், ஹரியாணா, ஜார்கண்ட், டெல்லி உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு தயாராகும் பணிகளை பாஜக இப்போதே தொடங்கியுள்ளது. இதற்காக பாஜக நிர்வாகிகள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடையே பாஜக தலைவர் அமித் ஷா பேசியதாவது:

மக்களவைத் தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் பாஜக அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. இருப்பினும் பாஜக பயணம் செய்ய வேண்டிய தூரம் உள்ளது. இன்னமும் உச்ச நிலையை கட்சி எட்டவில்லை.

விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் கவனம் செலுத்த வேண்டும். தெலங்கானா, மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களில் சமீபத்தில் கட்சி சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது.

மேற்குவங்கத்திலும், கேரளாவிலும் கட்சி வேகமாக வளருவதற்கான சூழல் உள்ளது. இதனை கட்சி நிர்வாகிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து தரப்பு மக்களிடமும் கட்சியை கொண்டு செல்ல இந்த மாநில நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close