[X] Close

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின் இடையே சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 08:21 am
  • அ+ அ-

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பில் நடைபெறும் மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று சந்தித்துப் பேசினர். அப் போது இருதரப்பு உறவை பலப் படுத்துவது குறித்து ஆலோசித் தனர்.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ் கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பு நாட்டு தலைவர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாட்களுக்கு நடை பெறும் இந்த மாநாட்டில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 உறுப்பு நாடுகளின் தலை வர்கள் பங்கேற்கின்றனர். இதுதவிர பார்வையாளர்களாக உள்ள ஆப் கானிஸ்தான், பெலாரஸ், ஈரான் மற்றும் மங்கோலியா ஆகிய 4 நாடு களின் தலைவர்களும் பங்கேற் கின்றனர். வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலையில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.

அந்த விமானம் ஓமன், ஈரான் வான் வழியாக பிற்பகல் 3 மணியளவில் பிஷ்கெக் சென்றடைந்தது. அங்கு பிரதமர் மோடிக்கு சிறப்பான வர வேற்பு வழங்கப்பட்டது. 2-வது முறையாக பிரதமராக பொறுப் பேற்ற பிறகு, பல நாட்டு தலைவர் கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுதான்.

இந்த மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் தனியாக சந்தித்துப் பேசினர். அப்போது தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரான மோடிக்கு ஜின்பிங் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் இரு தலைவர்கள் முன்னிலையில், இருதரப்பு உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “சீன அதிபருடனான சந்திப்பு ஆக்கப் பூர்வமானதாக இருந்தது. இரு தரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேசினோம். குறிப்பாக பொருளாதார மற்றும் கலாச்சார உறவை மேம்படுத்த தொடர்ந்து பாடுபட உறுதிபூண்டுள்ளோம்” என பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானிலிருந்து ஏவப் படும் எல்லை தாண்டிய தீவிர வாதம் குறித்து பிரதமர் மோடி ஜி ஜின்பிங்கிடம் கவலை தெரிவித் தார். தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் அரசு உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அந்த நாட்டுடன் பேச்சு வார்த் தையை தொடர முடியும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் வரும் ஜூலை 15-ம் தேதி பிறந்தநாள் கொண்டாட உள்ள சீன அதிபருக்கு இந்திய மக்கள் சார்பில் பிரதமர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.

இந்தியாவுக்கு வருமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாகவும் அவர் அதை ஏற்றுக் கொண்டதாகவும் வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கேசவ் கோகலே தெரிவித்துள்ளார்.

புதினுடன் சந்திப்பு

மேலும் ரஷ்ய அதிபர் விளாடி மிர் புதின், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி உள்ளிட்ட தலைவர் களையும் பிரதமர் மோடி தனித் தனியாக சந்தித்துப் பேசினார்.

அதேநேரம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பிர தமர் மோடி சந்திக்க மாட்டார் என வெளியுறவு அமைச்சகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. மேலும், பிஷ்கெக் நகருக்கு செல் வதற்காக பாகிஸ்தான் வான் பகுதியை பிரதமர் மோடி பயன் படுத்திக் கொள்ள அந்த நாடு அனுமதி அளித்திருந்தது. ஆனா லும், மோடி அந்த வழியில் பயணிக்க மாட்டார் எனவும் வெளியுறவு அமைச்சகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாடு முடிவடைந்த பிறகு கிர்கிஸ்தான் அதிபர் சூரன்பே ஜீன்பெகோவை இன்று பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார். அப்போது இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close