[X] Close

ஆந்திராவிலுள்ள தனியார் பள்ளிக்கு அரசு கெடுபிடி?


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 08:11 am
  • அ+ அ-

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றதும் பல அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார்.

தனியார் பள்ளிகளில் அளவுக்கு அதிகமாக வசூலிக்கப்படும் கட்டணங்களை தடுக்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை எடுக்க உள்ளார்.

இதுகுறித்து அமராவதியில் கல்வித் துறை அமைச்சர் சுரேஷ் கூறும்போது, “தனியார் பள்ளிகளில் அதிகமான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதை தடுப்பதற்காக, தனி கமிட்டியை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி மாணவர்கள் புத்தகங்களை அதிகம் சுமப்பதை தவிர்க்கவும் புதிய திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது” என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close