[X] Close

பாஜக வரம்பு மீறி பிரச்சாரம்: சோனியா காந்தி குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 08:10 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வெற்றி பெற்றார். அதற்கு அருகிலேயே உள்ள காங்கிரஸின் பாரம்பரிய தொகுதியான அமேதியில் போட்டியி்ட்ட கட்சித் தலைவர் ராகுல் காந்தி தோல்வியடைந்தார். ரேபரேலியில் பெற்ற வெற்றிக்கு நன்றி தெரிவிக்க சோனியா காந்தியும் அவரது மகளும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்காவும் நேற்று முன்தினம் அத்தொகுதிக்கு சென்றனர்.

அங்கு நடந்த கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், ‘‘மக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக கண்ணியத்துக்கான வரம்புகளை மீறி பாஜக பிரச்சாரம் செய்தது. இது துரதிர்ஷ்டவசமானது. வாக்காளர்களைக் கவர எல்லாவிதமான தந்திரங்களும் மேற்கொள்ளப்பட்டன. நமது தேர்தல் நடைமுறைகள் குறித்து கடந்த சில ஆண்டுகளாக பலவிதமான சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. தேர்தலின்போது நடந்தவை சரியா, இல்லையா என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரியும்’’ என்றார்.

பிரியங்கா பேசும்போது, ‘‘என்னை உண்மையை பேசவிடுங்கள். தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் சரியாக பணியாற்றவில்லை. சோனியாவின் உதவியாலும் ரேபரேலி மக்களாலும்தான் இங்கு வெற்றி கிடைத்துள்ளது. தேர்தலில் பணியாற்றாத கட்சி நிர்வாகிகள் யார் என்பதை கண்டுபிடிப்பேன்’’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close