[X] Close

முத்தலாக் தடை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: வரும் கூட்டத்தொடரில் நிறைவேற்றம்?


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 21:08 pm
  • அ+ அ-

-ஐஏஎன்எஸ்

முத்தலாக் முறையில் விவகாரத்து பெறுவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட மசோதா  வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில்  அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

முஸ்லிம் பெண்களின் (திருமணம் உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019க்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) வழங்கியது. நடப்பாண்டில் கடந்த பிப்ரவரியில் அமலுக்கு வந்த இச்சட்டம் மாற்றியமைக்கப்படும்.

இதுகுறித்து தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“முன்பு இச்சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட முடியவில்லை. இதற்கான ஒழுங்குமுறை ஒவ்வொரு முறையும் கொண்டு வர வேண்டி உள்ளது. இதில் மேல்சபைக்கு தேவையான ஆதரவு கிடைக்கும் என்று அவர் நம்புகிறேன் என்றார்.

மத்திய அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், முஸ்லிம் பெண்களுக்கு பாலின சமத்துவத்தையும் முஸ்லிம் பெண்களுக்கான பாலின நீதியையும் இச்சட்ட மசோதா உறுதி செய்யும்.

மேலும் திருமணமான முஸ்லிம் பெண்ணின் உரிமைகளை பாதுகாக்கவும் தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் வழக்கத்தை தடுக்கவும் உதவும்.

முத்தலாக் நடைமுறையை ஒன்றுமில்லாததாகவும் மற்றும் சட்டவிரோதச் செயலாக அறிப்பதையும் மற்றும் முஸ்லிம் பெண்களுக்கும் அவர்களை சார்ந்து இருக்கும் குழந்தைகளுக்கு வாழ்வாதர இழப்பீடு வழங்குவதையும் இச்சட்டம் முன்மொழிகிறது.

இச்சட்டம் முத்தலாக் நடைமுறையை தண்டனை வழங்கத்தக்க குற்றமாக முன்மொழிகிறது. அவ்வகையில் தலாக் பெறப்பட்ட திருமணமான முஸ்லிம் பெண் அல்லது அவரது ரத்த சம்பந்தப்பட்ட உறவினரோ அல்லது திருமணத்தினால் அவருடன் தொடர்புடைய எந்த நபரும் இக்குற்றம் தொடர்பான தகவலை காவல் நிலையத்தில் பொறுப்பதிகாரியிடம் வழங்கப்பட்டால் தலாக் கூறியவர் தண்டனைக்குரிய குற்றவாளியாக கருதப்படுவார்.

திருமணமான முஸ்லிம் பெண்ணிடம் தலாக் கூறப்படுவது இச்சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள நடைமுறைக்கு இணங்க குற்றமாக கருதப்பட வேண்டும்.

தலாக் கூறப்பட்ட திருமணமான முஸ்லிம் பெண்ணின் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு முன்னதாக குற்றஞ்சாட்டப்பட்டவர் மாஜிஸ்திரேட் நீதிபதி வழங்கும் பிணை ஆணை மீது மட்டுமே அவர் ஜாமீனில் விடுவிக்கப்படுவார்”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close