[X] Close

போலி பேஸ்புக் கணக்கால் அம்பலம்: உ.பி.யில் புனைப்பெயரில் காதலித்தவர்கள் நேரில் சந்தித்தபோது கணவன், மனைவி என அறிந்து அதிர்ச்சி


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 16:59 pm
  • அ+ அ-

-ஆர்.ஷபிமுன்னா

புனைப்பெயரில் முகநூல் கணக்கின் விளைவுகளுக்கு உ.பி.யில் ஒரு தவறான முன் உதாரணம் ஏற்பட்டுள்ளது. முகம் தெரியாமல் காதலித்து நேரில் சந்தித்தவர்கள் கணவன், மனைவி என அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.

இந்த சம்பவம், உபியின் மேற்குப்பகுதியில் உள்ள அம்ரோஹாவில் நடைபெற்றுள்ளது. இதன் சாத்தா காவல் நிலைய பகுதியின் ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் ஆசிரியராக அந்த இளைஞர் உள்ளார்.

இவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாக அருகிலுள்ள கிராமவாசி இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் புனைப்பெயரில் முகநூல் கணக்கு வைத்து புதுப்புது ஆணு, பெண் நண்பர்களுடன் பேசும் பழக்கம் இருந்துள்ளது.

இதில், தம் புகைப்படங்களையும் போலியானதையே பயன்படுத்தி உள்ளனர். புனைப்பெயரிலான கணக்குகளால் ஒருவரை மற்றொருவர் அறியாமல் நட்பு வளையத்தில் வந்தனர்.

இருவருக்குள் தொடர்ந்த தீவிர நட்பு, கண்மூடித்தனமானக் காதலாக உருவானது. முகநூலிலேயே ஒருவருக்காக மற்றொருவர் உயிரை கொடுக்கவும் உறுதிமொழி ஏற்றனர்.

இவ்வாறு வலுவான தம் காதலை தொடர்ந்தவர்கள் ஒருநாள் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்ரோஹாவின் ஒரு உணவு விடுதியில் நேரம் குறிக்கப்பட்டது.

அந்த நேரமும் வந்தபோது ஏற்பட்ட சந்திப்பு இருவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஏனெனில், அங்கு புனைப்பெயரில் காதலித்தவர்கள் கணவன், மனைவி என தெரியவந்தது.

இதனால், இருவருக்கும் கிளம்பிய கடும் கோபத்தினால் விடுதியிலேயே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பல மணி நேரம் நடைபெற்ற கணவன், மனைவி மோதலை அங்கிருந்தவர்கள் சிரமத்துடன் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

ஆனால், மனைவி தன் தாய் வீட்டிற்கும், கணவர் தன் கிராமத்திற்கும் என பிரிந்து சென்றனர். இதன் மீது நேற்று மாலை கூடிய கிராமப்பஞ்சாயத்து இரவு முழுவதிலும் நடைபெற்றது.

இதிலும், இருதரப்பினுள் மோதல் ஏற்பட்டு முடிவிற்கு வராமல் தொடர்கிறது. எனினும், இந்த சம்பவம் ஒரு பாடமாக அப்பகுதிவாசிகளால் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close