[X] Close

இந்தியாவுக்கு தனியாக விண்வெளி நிலையம்: இஸ்ரோ புதிய திட்டம்


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 16:47 pm
  • அ+ அ-

-Janarthanaperumal S_50242

விண்வெளியில், இந்தியாவுக்கு தனியாக விண்வெளியில் ஆய்வு நிலையம் அமைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 விண்கலம் கடந்த 2008 -ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்தது. அதில் நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்து ஆயிரக்கணக்கான புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.

ரூ.800 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான் - 1 திட்டம் வெற்றி பெற்றதால் விண்வெளித் துறையில் நாட்டுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

இதையடுத்து, நிலவை மேலும்ஆராய சந்திரயான் - 2 விண்கலத்தை ஏவ இஸ்ரோ முடிவெடுத்தது. அதன்படி நிலவின் மேற்பரப்பையும், தென்துருவ முனையையும் ஆய்வு செய்யும் வகையில் விண்கலம் உருவாக்கப்பட்டது.

இந்த சந்திரயான்-2 விண்கலம் கடந்த 2018 - ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் விண்ணில் செலுத்தப்படுவது ஒத்தி வைக்கப்பட்டது.

சந்திரயான் - 2 விண்கலம் வரும் ஜூலை 15-ம் தேதி அதிகாலை 2.51-க்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில் ‘‘ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலம் தயார் நிலையில் உள்ளது. விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் நடைபெற்று வருகின்றன.

சந்திராயன் திட்டத்தை தொடர்ந்து இந்தியாவுக்கென தனியாக விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கும் திட்டத்தையும் இஸ்ரோ விரைவில் மேற்கொள்ளும்’’ எனக்க கூறினார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close