[X] Close

காணாமல்போன ஏஎன்-32 ரக விமானம்: 13 பேரும் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு


32-13

  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 15:08 pm
  • அ+ அ-

-Janarthanaperumal S_50242

அருணாச்சலபிரதேச மலைப்பகுதியில் காணாமல்போன விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டது.

கடந்த 3-ம் தேதி அசாம் மாநிலம், ஜோர்ஹட் விமானப்படைத் தளத்தில் இருந்து அருணாச்சலபிரதேசத்தின் மெச்சுக்கா நகருக்கு இந்திய விமானப் படையின் ஏஎன்-32 ரக விமானம் புறப் பட்டது. அந்த விமானத்தில், விமானி உள்ளிட்ட 6 அதிகாரிகள், 5 வீரர்கள், 2 பொதுமக்கள் என மொத்தம் 13 பேர் பயணம் செய்தனர்.

ஜோர்ஹட்டில் இருந்து மதியம் 12.27 மணிக்குப் புறப்பட்ட இந்த விமானம் பிற்பகல் 1.30 மணிக்கு மெச்சுகா நகரை சென்றடைய வேண்டும். ஆனால் அருணாச்சலபிரதேசத்தின் மலைப் பகுதியில் சுமார் 12,000 அடி உயரத்தில் விமானம் பறந்தபோது பிற்பகல் 1 மணிக்கு ரேடாரில் இருந்து திடீரென மறைந்தது.

உடனடியாக விமானத்தை தேடும் பணி தொடங்கப்பட்டது. எனினும் மோச மான வானிலை காரணமாக தேடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இந்திய விமானப்படையின் 9 போர் விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள், கடற்படையின் பி81 ரக விமானம், ஆளில்லா சிறிய ரக விமானங்கள், காணாமல் போன விமானத்தை இரவு பகலாக தேடி வந்தன.

செயற்கைக்கோள்கள் உதவி யுடன் இஸ்ரோ விஞ்ஞானிகளும் விமானத்தை தேடினர்.அதேநேரம் மலை கிராம மக்கள், உள்ளூர் போலீஸார், மலையேற்ற வீரர் கள், ராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்கள் என சுமார் 1,500-க்கும் மேற்பட் டோர் மலைப்பகுதியில் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

விமானம் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஒன்பது நாட்கள் தேடலுக்குப் பிறகு அருணாச்சலபிரதேசத்தின் லிபோ மலைப் பகுதியில் காணாமல்போன விமானத்தின் பாகங்களை விமானப் படை ஹெலிகாப்டரின் விமானி கண்டுபிடித்தார். இந்த தகவலை விமானப்படை உறுதி செய்தது.

எனினும் விமானத்தில் பயணம் செய்த 13 பேரின் நிலைமை என்னவானது என்பது குறித்த விவரம் வெளியாகாமல் இருந்து.

மோசமான வானிலை, செங்குத் தான மலைச்சரிவு காரணமாக விமான பாகங்கள் சிதறிக் கிடக்கும் மலைப் பகுதியில் ஹெலிகாப்டர்களை தரை யிறக்குவதில் சிக்கல் நீடித்தது. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த உறவினர்கள் கவலையுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில் தேடுதல் வேட்டை முழுமையாக முடிந்தநிலையில், காணாமல் போன ஏஎன்-32 ரக விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்ததாக விமானப்படை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close