[X] Close

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார்: ரன்தீப் சுர்ஜேவாலா தகவல்


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 08:26 am
  • அ+ அ-

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியே இருப்பார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே, இந்த தோல்வி குறித்து ஆராய கடந்த மே 25-ம் தேதியன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி விவாதித்தது.

அப்போது, இந்தத் தோல்விக்கு முழு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அதிரடியாக அறிவித்தார். ஆனால், அவரது முடிவை காங்கிரஸ் காரிய கமிட்டி நிராகரித்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் அவரை சமாதானம் செய்தனர். ஆனால், ராகுல் தனது முடிவில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவராக இருந்துவரும் ராகுல் காந்திதொடர்ந்து அந்தப் பதவியில் நீடிப்பார் என்று கட்சியின் முதன்மை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக, ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா சட்டப்பேரவைகளுக்கு நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான ஆயத்த ஏற்பாடுகள், வியூகம் பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு பிறகு நிருபர்களிடம் பேசியசுர்ஜேவாலா, "ராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார். அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close