[X] Close

குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படும் தேசம் எப்படி முன்னேறும்: கத்துவா சிறுமியின் வழக்கறிஞர் ஆவேசம்


how-can-we-develop-as-a-nation-when-we-are-raping-infants-asks-deepika-singh-rajawat

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Jun, 2018 16:59 pm
  • அ+ அ-

சோனம் சைகல்

ஜம்மு காஷ்மீரில் கத்துவா என்ற மாவட்டத்தில் 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை வழக்கில் சிறுமிக்காக ஆஜராகிவரும் வழக்கறிஞர்தான் தீபிகா சிங் ரஜ்வாத்.

ரஜ்வாத் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில், குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் இத்தேசம் எப்படி முன்னேறும் எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது பேட்டியிலிருந்து...

சட்டத்துறையை விரும்பி ஏற்றீர்களா?

வெகு நிச்சயமாக. எனக்குப் போராடுவது எப்போதுமே விருப்பமானது. சட்டத்தின் வாயிலாக நீதிமன்றத்துக்குள் போராட விரும்பினேன். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். எனது வேலையை நான் விரும்புகிறேன்.

கத்துவா வழக்கை ஏற்ற பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி மாறியுள்ளது?

நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன. என்னை தேசவிரோதி எனக் கூறுகின்றனர். ஒரு குழந்தையை ஆதரிப்பதால் என்னை தேச விரோதி என முத்திரைப் பதித்தார்கள் என்றால் அந்த அடையாளத்தை நான் பெருமிதத்துடன் சுமப்பேன். ஜம்மு-காஷ்மீர் வழக்கறிஞர் சமூகம் என்னை மிக மோசமாக நடத்துகிறது. என்னை ஒதுக்கிவைத்துள்ளனர். ஒரு வீடு கிடைப்பதுகூட எனக்குக் கடினமாக இருந்தது. இப்போது கிடைத்துவிட்டது. அடுத்ததாக வேலை செய்ய ஒரு இடம் தேடிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு பெண் என்பதாலேயே இது நடந்தது என நினைக்கிறீர்களா?

நிச்சயமாக. ஆனால், அதைவிட முக்கியமான காரணம் இந்துவாகிய நான் முஸ்லிம்களை ஆதரிப்பதால் இவை எல்லாம் நடக்கிறது.

உங்கள் பாதுகாப்பு குறித்து உங்களுக்கு அச்சம் இருக்கிறதா?

ஆமாம். இப்போது என்னைப் பல கண்கள் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன. வாய்ப்பு கிடைத்தால் என்னை சிதைத்துவிடுவர். ஆனால், எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது.
 
ஜம்மு-காஷ்மீர் மாநில மனித உரிமைகள் நிலவரம் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அங்குள்ள அரசியல் நிலவரம் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஆனால், ஒரு குழந்தையை பலாத்காரம் செய்து அவர்கள் எத்தகைய மகிழ்ச்சியை அடைந்துவிடுவார்கள் என்பது கேள்விக்கு உட்படுத்த வேண்டியது. சில நேரங்களில் எனக்கு அவர்கள் மிருகங்களாகவே தெரிகின்றனர். சில நேரங்களில் வீடுகளில் பலாத்காரங்கள் நடக்கின்றன. மேல்வர்க்கத்தில் நடக்கும் பாலியல் குற்றங்கள் வெளியே வருவதே இல்லை. குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் இத்தேசம் எப்படி முன்னேறும் என்பது மட்டுமே எனது கேள்வி.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close