[X] Close

ஆற்றில் குப்பையை கொட்டியவருக்கு அறிவுரை கூறிய கோவா முதல்வர்


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 08:14 am
  • அ+ அ-

ஆற்றில் குப்பையை கொட்டிய ஒருவருக்கு, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நேற்று தனது காரை நிறுத்தி அறிவுரை கூறினார்.

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நேற்று முன்தினம் வடக்கு கோவாவில் உள்ள கம்பர்ஜுவா நதி மீதான கவுண்டாலிம் பாலத்தில் காரில் சென்றுகொண்டிருந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இந்நிலையில் கவுண்டாலிம் பாலத்தில் ஒருவர் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு ஆற்றில் பழைய மலர் மாலைகளை வீசுவதைக் கண்டார். இதையடுத்து தனது காரை உடனே நிறுத்தச் சொன்ன பிரமோத் சாவந்த், ஆற்றில் மாலைகளை வீசிய நபரை அழைத்து, நதிகளை மாசுபடுத்த வேண்டாம், பொறுப்புள்ள குடிமகனாக நடந்துகொள்ளுங்கள் என அறிவுரை கூறினார்.

இதனை பிரமோத் சாவந்த் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துகொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், “கவுண்டாலிம் பாலத்தில் பயணம் செய்யும்போது, ஒருவர் மலர் மாலைகளை ஆற்றில் வீசுவதை கண்டேன். அவரிடம், இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டாம். பொறுப்புள்ள குடிமகனாக கழிவுகளை உரிய முறையில் அகற்ற வேண்டும். இதுகுறித்து சக மக்களுக்கும் நாம் விழிப்புணர்வும் வழிகாட்டுதலும் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close