[X] Close

ஆக்ரா நீதிமன்ற வளாகத்தில் உத்தரபிரதேச பார் கவுன்சில் பெண் தலைவர் சுட்டுக் கொலை


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 07:35 am
  • அ+ அ-

உத்தரபிரதேச மாநில பார் கவுன்சிலின் பெண் தலைவர் ஆக்ராநீதிமன்ற வளாகத்தில் சக வழக்கறிஞரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் பார் கவுன்சிலுக்கு நடந்த தேர்தலில் தலைவராக தர்வேஷ் சிங் (38) என்ற பெண் வழக்கறிஞர் தேர்ந்தெடுக்கப்பட்டார். உ.பி. பார்கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் தலைவர் இவர்தான். இரண்டு நாட்களுக்கு முன்புதான் தர்வேஷ் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்காக, அவருக்கு ஆக்ரா நீதிமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகல் பாராட்டு விழா நடந்தது.

பாராட்டு விழாவில் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். விழா நடந்து கொண்டிருந்தபோது அங்கு அமர்ந்திருந்த வழக்கறிஞர் மனீஷ் சர்மா என்பவர் திடீரென எழுந்து, தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் தர்வேஷ் சிங்கை நோக்கி சுட்டார். இதில் தர்வேஷ் சிங் உடலில் 3 குண்டுகள் பாய்ந்தன. சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் இறந்தார். சுற்றி இருப்பவர்கள் நிலைமையை புரிந்து கொள்வதற்கு முன்பே மனீஷ் சர்மா தற்கொலை முயற்சியாக தன்னையும் சுட்டுக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட தர்வேஷ் சிங் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பிவைத்தனர்.

2004-ம் ஆண்டு முதல் தர்வேஷ் சிங் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அவரை சுட்டுக் கொன்றசக வழக்கறிஞரான மனீஷ் சர்மாவுக்கும் இவருக்கும் நீண்ட காலமாக பழக்கம் உண்டு. என்ன காரணத்துக்காக தர்வேஷ் சிங்கை மனீஷ் சர்மா சுட்டுக் கொன்றார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்து வருவதாக ஆக்ரா கூடுதல் போலீஸ் சூப்பிரண்டென்ட் பிரவீன் வர்மா தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close