[X] Close

ஏஎன்-32 விமானம் விழுந்த இடத்தில் மீட்புப்பணி தீவிரம்


32

  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 07:38 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஏஎன்-32 ரக விமானம் விழுந்த இடத்தில் மீட்புப்பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கடந்த 3-ம் தேதி அசாம் மாநிலத்திலிருந்து ஏஎன்-32 ரக விமானம், அருணாச்சல பிரதேசத்திலுள்ள மென்சுக்கா விமானப்படைத் தளத்துக்கு 13 வீரர்களுடன்புறப்பட்டுச் சென்றது. பின்னர் காணாமல் போன இந்த விமானத்தைத் தேடும் பணிகள் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில் அந்த விமானம் அருணாச்சல பிரதேசத்தில் விழுந்து நொறுங்கியுள்ளது நேற்றுமுன்தினம் தெரியவந்தது. இதையடுத்து விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து விமானப்படை செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “விமானப்படை, ராணுவ வீரர்கள், மலையேறும் வீரர்கள் அடங்கிய குழு சம்பவம் நடந்த இடத்துக்கு விமானம் மூலம் சென்றுள்ளது.

விபத்து நடந்த இடத்தில் யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்பதையும் அந்தக் குழு ஆய்வு செய்யும். 8 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தி விபத்து நடந்த இடத்தைக் கண்டுபிடித்த குழுவுக்கு ஏர்மார்ஷல் ஆர்.டி.மாத்தூர் பாராட்டு தெரிவித்தார்” என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close