[X] Close

பிஹாரில் 2,100 விவசாயிகளின் கடனை அடைத்தார் அமிதாப் பச்சன்


2-100

  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 07:26 am
  • அ+ அ-

பிஹார் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களின்வங்கிக் கடன்களை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவித்து வந்தனர். இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகின.

இதனிடையே, அந்த விவசாயிகளின் கடன்களை தாம் அடைக்கப் போவதாக அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிஹாரில் அதிகஅளவில் வங்கிக் கடன் பெற்ற விவசாயிகளில் 2,100 பேரை தேர்வுசெய்து அவர்களை மும்பையில் உள்ள தமது இல்லத்துக்கு அமிதாப் பச்சன் நேற்று வரவழைத்தார்.

பின்னர், அவர்களின் கடன்களை அடைப்பதற்கான தொகையை தமது மகள் ஷ்வேதா மற்றும் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோரின் மூலமாக அமிதாப் பச்சன் ஒப்படைத்தார்.

இதுதொடர்பாக நேற்று தனதுட்விட்டர் பக்கத்தில், "கொடுத்தவாக்குறுதி நிறைவேற்றப்பட்டுவிட்டது. பிஹாரில் 2,100 விவசாயிகளின் வங்கிக் கடன் அடைக்கப்பட்டுள்ளது" என அமிதாப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் விரைவில் நிதியுதவி அளிக்கப்படும் எனவும் அமிதாப் உறுதியளித்துள்ளார்.

இதற்கு முன்பாக, உ.பி.யின் 1,398, மகாராஷ்டிராவின் 350 விவசாயிகளின் வங்கிக் கடன்களையும் அமிதாப் செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close