[X] Close

முத்தலாக் தடை மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 07:21 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

முத்தலாக் தடை புதிய மசோதா வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பு தல் அளித்துள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

மத்திய அமைச்சரவைக் கூட்டத் தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு கள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு முத்தலாக் தடை மசோதாவை மக்களவையில் ஏற் கெனவே நிறைவேற்றி யது. மாநிலங் களவையில் அரசுக்கு போதிய பலம் இல்லதாததால் இந்த மசோ தாவை நிறைவேற்ற முடியவில்லை. இதனால், கடந்த ஆண்டு செப்டம்ப ரில் முத்தலாக் தடை அவசரச் சட் டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசு நீட்டிப்பு வழங்கியது. முஸ்லிம் பெண்களின் பாதுகாப்புக்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், முத்தலாக் தடை மசோதாவில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இதை யடுத்து முஸ்லிம் பெண்கள் (திரு மண உரிமையில் பாதுகாப்பு) மசோதா எனப்படும் இந்த புதிய முத்தலாக் தடை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா வரும் திங்கள்கிழமை தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்படும்.

முத்தலாக் கூறி விவாகரத்து செய்தால் 3 ஆண்டு சிறைத்தண் டனை மற்றும் அபராதம் விதிக்கப் படும், மேலும் விவாகரத்து செய்யப் படும் பெண்கள், அவர்களது குழந்தைகளுக்காக ஜீவனாம்சம் வழங்க வழிவகை செய்தல் உள் ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப் பேரவை முடக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப் பட்டது. ஆளுநர் ஆட்சி அறிவிக் கப்பட்ட தேதி முடிவடைந்த நிலை யில் தற்போது அங்கு மீண்டும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மாநிலத்தின் ஆளுநர் சத்யபால் மாலிக் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார். இதனை ஏற்று வரும் 20-ம் தேதி முதல் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலை வர் ஆட்சியை அங்கு அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close