[X] Close

குஜராத்தில் இன்று கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்: 2.15 லட்சம் பேர் வெளியேற்றம்


2-15

  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 07:13 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘வாயு’ புயல் குஜராத்தில் இன்று கரையைக் கடக்கவுள்ளது. இதை யடுத்து முன்னெச்சரிக்கையாக குஜராத்தின் கடலோரப் பகுதி களில் தாழ்வான இடங்களில் வசிக்கும் 2.15 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அரபிக்கடலில் ‘வாயு’ புயல் 340 கிலோமீட்டர் தூரத்தில் மைய மிட்டுள்ளது. அது படிப்படியாக நகர்ந்து இன்று (ஜூன் 13-ம் தேதி) பகல் 12 மணிக்குப் பிறகு கரை யைக் கடக்கவுள்ளது. புயல் கரை யைக் கடக்கும்போது மணிக்கு 145 கிலோ மீட்டர் முதல் 170 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக சவுராஷ் டிரா, கட்ச் பகுதிகளில் வசிக்கும் 2.15 லட்சம் மக்கள் வெளியேற் றப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லா மல் மோர்பி, ஜாம்நகர், ஜுனகத், தேவ்பூமி-துவாரகா, போர்பந்தர், ராஜ்கோட், அம்ரேலி, பாவ்நகர், கிர்-சோம்நாத் ஆகிய 10 மாவட் டங்களிலும் புயலின் பாதிப்பு இருக்கும் எனத் தெரிகிறது.

அந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற குஜராத் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கான உத்தரவை முதல்வர் விஜய் ரூபானி பிறப்பித்துள்ளார். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு பொதுமக்களையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து துணை முதல்வர் நிதின் பட்டேல் கூறும்போது, “10 மாவட்டங்களில் 400 கிராமங் களில் இருந்து இதுவரை 2.15 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளோம்.

அவர்களுக்குத் தேவையான உணவு வசதிகள் செய்து தரப்பட் டுள்ளன. கடலோரக் காவல்படை, ராணுவம், விமானப்படை, கடற் படை, எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள னர்” என்றார்.

இந்நிலையில் குஜராத் கட லோரப் பகுதிகளில் இருக்கும் மக் களை பாதுகாப்பான இடங்களுக் குச் செல்லுமாறு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறும்போது, “வாயு புயல் காரணமாக கடலோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவேண்டும். அங்குள்ள மாவட்ட நிர்வாகங்களின் உதவியுடன் பொதுமக்கள் தங்க லாம். இதற்கான ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. உதவி தேவைப் படும் பொதுமக்கள் அருகிலுள்ள முகாம்கள், மாவட்ட நிர்வாக அதி காரிகளை அணுகலாம்” என்றார்.

இந்நிலையில், ‘வாயு’ புயலைச் சமாளிக்க கடற்படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக மேற்கு மண் டல கடற்படை அறிவித்துள்ளது.

மீட்புப் பணிகளில் ஈடுபட விமா னங்கள், ஹெலிகாப்டர்கள், கடற் படை படகுகள், கப்பல்கள் தயா ராக இருப்பதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

மீட்புப் படை

புயல் நிவாரணம் மற்றம் மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 46 குழுக் கள், மாநில பேரிடர் மீட்புக் குழு வைச் சேர்ந்த 11 குழுக்கள், சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த 13 குழுக்கள், ராணுவத்தைச் சேர்ந்த 11 குழுக்கள், எல்லைப் பாது காப்புப் படையைச் சேர்ந்த 2 குழுக்கள், கடற்படையைச் சேர்ந்த 300 கமாண்டோ வீரர்கள் என ஏராளமான குழுவினர் குஜ ராத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close