[X] Close

மேற்குவங்கத்தில் பாஜக தொண்டர்கள் தடையை மீறி பேரணி செல்ல முயற்சி: போலீஸ் தடியடி


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 17:33 pm
  • அ+ அ-

மேற்குவங்கத்தில் பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து அக்கட்சியின் சார்பில் கொல்கத்தாவில் இன்று பேரணி நடைபெற்றது. இதற்கு அனுமதி அளிக்காத நிலையில் போலீஸார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் அவர்களை கலைத்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, இந்தத் தேர்தலில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியது.

தேர்தலில் இருந்தே இருகட்சி தொண்டர்களிடையே தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகிறன. 24 பர்கானா மாவட்டம் கந்தேஷ்காளி என்ற இடத்தில் பாஜக கொடிக்கம்பம் மற்றும் பதாகைகளை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் அகற்றினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

தேர்தலுக்கு பின் அங்கு தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. தொண்டர்கள் சிலர் கொல்லப்பட்டதை கண்டித்த தொடர்ந்து பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக சார்பில் கொல்கத்தாவில்  லால்பஜாரில் இருந்து காவல்துறை  ஆணையர் அலுவலகம் நோக்கி பேரணி நடைபெற்றது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.லால் பஜாரில் இருந்து புறப்பட்ட பாஜக தொண்டர்கள் காவல் துறை அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, அவர்களை தடுத்து நிறுத்து போலீஸார் முயன்றனர்.அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பாஜக தொண்டர்களை விரட்டியடித்தனர். மேற்குவங்க அரசுக்கு எதிராகவும், போலீஸாருக்கு எதிராகவும் பாஜக தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close