[X] Close

மகனைக் காப்பாறிய முகமறியாதவர்களுக்கு ஒரு தந்தையின் உருக்கமான நன்றிக் கவிதை


viral-poem-by-iim-prof-thanking-strangers-who-rescued-his-injured-son

உள் படம் அலோக் குமார். பெரிய படம் அவரது மகன் அபிஷேக்

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Jun, 2018 13:57 pm
  • அ+ அ-

கொல்கத்தாவில் ஐஐஎம் நிறுவனத்தில் பேராசிரியாக பணிபுரியும் அலோக் குமார் விபத்தில் சிக்கிய அவரது மகன் அபிஷேக்கைக் காப்பாற்றிய முகம் தெரியாதவர்களுக்கு தனது கவிதை மூலம் நன்றி தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் அன்றாடம் சாலை விபத்துகளில் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். விபத்தில் சிக்கியவர்கள் கண்டும் காணாமல் செல்வோரே அதிகம். ஆனால், வழக்குகள் பற்றி எல்லாம் யோசிக்காமல் உடனே உதவிக்கரம் நீட்டும் உன்னத மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

கொல்க்கத்தா சம்பவம்..
அபிஷேக் என்ற இளைஞர் விபத்தில் சிக்கிக் கொண்டார். கொல்கத்தா லால் பஜாரில் உள்ள பார்ஸி ஃபயர் கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது அவர் விபத்தில் சிக்கினார். அவரை அங்கிருந்த நபர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றினர்.
இது குறித்து அலோக்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நீண்ட கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

எனது மகன் விபத்தில் சிக்கினார்.
லால் பஜார் பார்ஸி கோயிலில் இருந்து திரும்பும்போது ஜவஹர்லால் நேரு சாலை மேம்பாலத்தில் வரும்போது
அரசுப் பேருந்து மோதி காயமடைந்தார்
வெஸ்பா வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். அவர் தலையில் ஹெல்மெட் இருந்தது
5 முதல் 7 நிமிடங்கள்வரை அசைவே இல்லாமல்தான் இருந்திருக்கிறார்.
இடைப்பட்ட நேரத்தில் அருகிலிருந்த பாதசாரிகள் குவிந்தனர்
அவரை மீட்டனர்.
தண்ணீர் தந்தனர்.
அவரது வாகனத்தை சாலையில் இருந்து மீட்டு ஒரு ஓரமாக நிறுத்தினர்.

சிலர் அவரை எஸ்எஸ்கேஎம் மரித்துவமனைக்குக் கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளனர்.
ஆனால் அவரோ தந்தைக்கு ஃபோன் செய்யுங்கள் எனக் கோரியுள்ளார்.
சிலர் போலீஸை 10-ல் அழைத்துள்ளனர்.
மகன் சொன்னபடி அவரை வீட்டுக்கு அழைத்துவந்தனர்.
ஒருவர் நான் வரும்வரை என் மகனுக்கு துணையாக இருந்தார்.

பின்னர் நான் அவரை ஸ்ரீ அரபிந்தோ சேவா கேந்த்ரா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன்
சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது
விலா எலும்பு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.
24 மணி நேரம் கடந்துவிட்டது.
அவர் உடல்நலன் தேறி வருகிறார்.

அவரது ஐபோன் பத்திரமாக இருந்தது
அவர் பர்ஸில் இருந்து ஒரு ரூபாய்கூட காணாமல் போகவில்லை.
மதிப்புடைய எந்தப் பொருளும் காணாமல் போகவில்லை.
எனது வீட்டில் பழம்பொருட்கள் அத்தனை இருக்கின்றன
அவையும் களவாடப்படவில்லை
 
போலீஸார் கனிவுடன் நடந்து கொண்டனர்
சேக்‌ஷ்பியர் சாலை காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க முடியவில்லை என்றோம்
அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆட்டோமொபைல் கடையில் இருந்த சில நண்பர்கள்
எனது மகனின் வாகனத்தை பத்திரமாக ஓரிடத்தில் நிறுத்தினர்.

எனது மகனுக்கு உடனே உதவிக்கரம் நீட்டிய அந்த நபர்கள் யார்?
போலீஸைக் கூப்பிட்டு,
என்னைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து,
என் மகனை பத்திரமாக வீட்டுக்கு கொண்டுவந்து
காருக்கு வாடகை கொடுத்து
உதவியர்கள் யார்

அவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது
இது கொல்கத்தா, நான் அறிந்த கொல்கத்தா
இது கொல்கத்தா, நான் வாழும் கொல்கத்தா
இது கொல்கத்தா, நான் நேசிக்கும் கொல்கத்
தா

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close