[X] Close
 

அம்பானி வீட்டு திருமண அழைப்பிதழ் மட்டுமல்ல அமர் - ராணி திருமண அழைப்பிதழும் செய்திதான்


maha-couple-requests-books-as-wedding-gifts-sets-up-library-for-needy-kids

  • பாரதி
  • Posted: 14 Jun, 2018 12:21 pm
  • அ+ அ-

இணையம் முழுவதும் இரண்டு நாட்களாக வைரலாகிக் கொண்டிருக்கிறது முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண பத்திரிகை. ஆனால், ஆரவாரம் இல்லாமல் பாராட்டுகளைக் குவித்துவருகிறது மகாராஷ்டிரா தம்பதியின் திருமண அழைப்பிதழ்.

முதல் அழைப்பிதழ் பிரபலமாகக் காரணம் பத்திரிகையில் தங்கத்தில் மணமகன் மணமகள் பெயர் பொரிக்கப்பட்டிருப்பது. ஆனால், மகாராஷ்டிரா தம்பதியின் திருமணப் பத்திரிகை இதைவிட மதிப்புமிக்கது.

ஆம், அமர் - ராணி தங்கள் திருமண அழைப்பிதழில் ஒரு கோரிக்கை விடுத்திருந்தனர். "எங்கள் திருமணத்துக்கு வருபவர்கள் மலர்க்கொத்து வாங்கிவர வேண்டாம். சமையல் பாத்திரங்கள் வாங்கிவர வேண்டாம் ஏன் நகைகள்கூட வேண்டாம். ஆனால், பரிசளிக்க விரும்புவர்கள் இவற்றிற்குப் பதிலாக போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களை வாங்கி வரவும்" எனக் கோரியிருந்தனர்.

அந்தக் கோரிக்கை சமூக வலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்துள்ளது. திருமண விழா மேடையை சமூக சேவை மேடையாக மாற்றிய இளம் தம்பதிக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

யார் இந்த அமர் - ராணி தம்பதி?
அமர், யுவ சேத்னா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது கணவு போட்டித் தேர்வு எழுதும் ஏழை எளிய மாணவர்களுக்காக ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்பதே. அவரது காதல் மனைவி ராணி புனே பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக இருக்கிறார். இருவரும் திருமணத்துக்கு திட்டமிட்ட போது திருமணப் பரிசாக புத்தகங்களைப் பெற வேண்டும் என முடிவு செய்தனர். அதை செயல்படுத்தியும் உள்ளனர்.

இத்தனைக்கும் அவர்கள் பத்திரிகையை தாளில் அடிக்கவில்லை. வாட்ஸ் அப் மூலமாகவே நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பியுள்ளனர். இந்த வாட்ஸ் அப் பத்திரிகை இணையத்தில் வைரலாக. அதைப் பார்த்து அமருக்கு அறிமுகம் இல்லாதவர்கள்கூட திருமணத்துக்கு வந்து வாழ்த்தியதோடு விலை உயர்ந்த புத்தகங்களைப் பரிசாக அளித்துச் சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close