[X] Close

காஷ்மீரில் பேரவை தொகுதிகளை மறுவரையறை செய்ய முடிவு; தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும் என மத்திய அரசு நம்பிக்கை


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 09:40 am
  • அ+ அ-

-ஆர்.ஷபிமுன்னா

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தொகுதிகளை மறுவரையறை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் அங்கு நிலவும் தீவிரவாத நட வடிக்கைகளுக்கு முடிவு ஏற்படும் என பாஜக எதிர்பார்க்கிறது.

ஜம்மு-காஷ்மீருக்கு உள்ள சிறப்பு அதிகாரம் காரணமாக மத்திய அரசால் மற்ற மாநிலங் களைப் போல் அங்கு தலையிட முடியவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அதில் முக்கியமாக, ஜம்மு-காஷ்மீரின் சட்டப்பேரவை தொகுதிகள் உரு வான வரலாற்றில் பல தவறுகள் நிகழ்ந்திருப்பதாகக் கருதப்படு கிறது. குறிப்பாக ஜம்முவின் டோக்ரா சமூகத்தினர் அதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்முவை தலைநகராகக் கொண்டு சுமார் 100 வருடங்கள் ஆண்ட இச்சமூகத்தினர் அம்மாநில அரசு அலுவலகங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். ஆனால், அவர்களால் அம்மாநில எம்எல்ஏக்க ளாக வர முடிவதில்லை. இதற்கு அவர்கள் வாழும் தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்கள் வெற்றி, தோல்வியை முடிவு செய்யும் நிலை யில் இருப்பது காரணம். இத்தனைக் கும் டோக்ரா சமூகத்தின் ஆட்சியும் முடிவுக்கு வந்து 1941 ஆம் ஆண்டு வரை காஷ்மீரில் முஸ்லிம்களை விட இந்துக்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது.

இதுபோல, லடாக் பகுதியில் புத்த சமயத்தினரும், கார்கிலில் முஸ்லிம்களின் ஷியா பிரிவினரும் அதிகம் உள்ளனர். அதேநேரம் இப்பகுதிகளில் முஸ்லிம் களும் பரவலாக இருப்பதால் அங்கு ஷியா மற்றும் புத்த சமயத்தினரால் அதன் சட்டப்பேரவைக்கு அதிகம் வர முடிவதில்லை. மூன்றாவது முக்கியப் பகுதியான காஷ்மீரில் முஸ்லிம்கள் அதிகமாகி அவர் களால் நடத்தப்படும் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி (என்சி), மெகபூபா முப்தி யின் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) ஆகியவையே பலம் வாய்ந்ததாக உள்ளன. இதனால், அப்துல்லா அல்லது முப்தி குடும்பத் தினரே அங்கு மாறி, மாறி கூட்டணி ஆட்சி செய்து வருவதும் மத்திய அரசின் தலையீட்டில் இருந்து தப்ப முக்கிய காரணமாக உள்ளது.

இந்நிலையில், கடைசியாக பாஜகவின் கூட்டணியுடன் மெகபூபா முப்தி அமைத்த அரசும் கவிழ்ந்து 2-வது வருடமாக குடியரசு தலைவர் ஆட்சி நடைபெறுகிறது. அடுத்து சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் முன்பு, மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா அங்கு பல அதிரடி திட்டங்களை செயல் படுத்த உள்ளார். இதில், பிரதமர் மோடியும், அவரது தேசியப் பாது காப்பு ஆலோசகரும் இணைந்து ‘மிஷன் காஷ்மீர்’ எனும் பெயரில் ஒரு அதிரடி திட்டத்தை செயல் படுத்த உள்ளனர். சட்டப்பேரவை தொகுதிகளின் மறுவரையறை அதில் முக்கிய இடம் பெற் றுள்ளது. ஏனெனில், காஷ்மீரின் தொகுதிகளை விட அதிகமான மக்கள் தொகை ஜம்மு மற்றும் லடாக்கில் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக, காஷ்மீரின் 2 தொகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் தொகை உள்ளது. இதுவன்றி ஜம்முவின் மலைஜாதியினருக்கான 7- தொகுதிகளைப் போல் காஷ்மீரில் 11 சதவிகிதமாக வாழும் குஜ்ஜர், பேக்கர்வால்ஸ், கத்தீஸ் உள்ளிட்ட மலைவாழ் மக்களுக்காக தனித் தொகுதிகள் ஒன்றுகூட இல்லை.

தற்போது மொத்தம் 111 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் பாகிஸ்தான் ஆக்கிர மிப்பு காஷ்மீரில் 24, காஷ்மீர் 46, ஜம்மு 37 மற்றும் லடாக்கில் 4 தொகுதிகள் உள்ளன. இவற்றில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ் மீரில் உள்ள 24 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படாமல் அவை காலியாக உள்ளதாகவே கணக் கிடப்படுகின்றன, மீதம் உள்ள 87 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று ஆட்சி அமைந்து வருகிறது.

ஜம்முவில் கூடுதல் தொகுதி

இந்நிலையில், மத்திய அரசு செய்யும் தொகுதி மறுவரையறை யில் ஜம்முவில் பாஜகவுக்கு சாதக மான பகுதிகளில் கூடுதலான தொகுதிகளை உருவாக்கத் திட்ட மிடப்படுவதாகக் கூறப்படுகிறது. காஷ்மீரில் தொகுதிகளை குறைப்ப துடன், லடாக் மற்றும் கார்கில் பகுதி களில் புத்த சமயம் மற்றும் ஷியா பிரிவினர் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையிலும் மறுவரையறை செய் யப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது. இதனால், இந்த மறுவரை யறை அரசியல் ஆதாயத்திற்காக, மதச்சார்புடன் செய்யப்படுவதாக காஷ்மீரின் என்சி, பிடிபி ஆகிய கட்சி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமித் ஷாவுக்கு ஆதரவாக காஷ்மீரில் மக்கள் மாநாட்டுக் கட்சியின் சஜாத் லோன் மற்றும் அவாமி இத்தஹாத் கட்சியின் இன்ஜினியர் ராஷீத் உள்ளனர். தன் ஐஏஎஸ் பதவியை துறந்து புதிதாக ‘ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்கம்’ எனும் கட்சியை துவக்கியவ ரான ஷா பைஸலும் மறுவரையறை செய்ய பாஜகவுக்கு ரகசிய ஆதர வளிப்பதாகக் கருதப்படுகிறது.

இதேபோன்ற சூழலில்தான் இம் மாநிலத்தில் 1975-ல் கடைசியாக மறுவரையறை செய்யப்பட்டது. அப்போது தேசிய மாநாட்டின் முதல்வராக இருந்த ஷேக் அப்துல்லா, தம் கட்சிக்கு சாதகமாக மறுவரையறை செய்து கொண்டார். இந்த நிலை மேலும் மோசமாகும் வகையில் 2002-ல் முதல்வராக இருந்த அவரது மகன் பரூக் அப்துல்லா ஒரு சட்டதிருத்தம் செய் தார். இதன்படி, 2026-க்கு பின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பின்பே மறுவரையறை செய்ய முடியும். எனினும், இந்த சட்டத்தில் ஜம்மு-காஷ்மீரின் ஆளுநர் சத்ய பால் திருத்தம் செய்து மறுவரையறை செய்ய முடியும். ஆனால், அதற்கு நாடாளு மன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றி அனுமதி பெற வேண்டி இருக்கும். இதற்கான நடவடிக்கையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா களம் இறங்கி உள்ளார்.

மறுவரையறைக்கு பின் நடை பெறும் சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை கைப்பற்றி மேலும் பல அதிரடி நடவடிக்கைகள் செய்வது மிஷன் காஷ்மீரின் அங்கமாக உள்ளது. இதன்படி, ஜம்மு-காஷ் மீரில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத நடவடிக்கைகளை ஒழித்து விடலாம் எனவும் மத்திய அரசு நம்புகிறது. தற்போது தீவிர வாதம் தொடர்வதற்கு ஜம்மு-காஷ் மீரில் ஆளும் கட்சிகளின் மறைமுக ஆதரவு அதற்கு கிடைப்பதே காரணம் எனவும் மத்திய அரசு கருதுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close