[X] Close

மேற்கு வங்கத்தில் நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் உயிரிழப்பு


2

  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 09:37 am
  • அ+ அ-

மேற்கு வங்க மாநிலத்தில் மக்கள வைத் தேர்தலின்போது திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண் டர்களுக்கிடையே மோதல் ஏற்பட் டது. தேர்தல் முடிந்த பிறகும் இரு தரப்பினருக்கும் இடையிலான மோதலும் வன்முறை சம்பவங் களும் தொடர்கதையாக உள்ளது.

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் சந்தேஷ்கலி பகுதியில் இரு கட்சியினர் இடையே கடந்த 8-ம் தேதி ஏற்பட்ட சண்டையில் மட்டும் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து, பாஜக சார்பில் நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் கறுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதனிடையே, அம்மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதி, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று முன்தினம் சந்தித் தார். அப்போது மேற்கு வங்க நிலவரம் குறித்து எடுத்துரைத்தார்.

இந்த சூழ்நிலையில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், கன்கினாரா பகுதியில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இந்தத் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் வன்முறை பரவுவதை தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close