[X] Close

பிரதமர் மோடியுடன் நவீன் பட்நாயக் சந்திப்பு


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 08:20 am
  • அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடியை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று சந்தித்துப் பேசினார்.

சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் பிஜூ ஜனதாதளம் கட்சி வெற்றி பெற்று நவீன் பட்நாயக் மீண்டும் முதல்வரானார். மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதால் இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை நவீன் பட்நாயக் நேற்று டெல்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தேர்தல் வெற்றிக்காக இருவரும் பரஸ்பரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

ஒடிசாவில் கடந்த மே மாதம் வீசிய பானி புயலால் ஏற்பட்ட பாதிப்புக்காக மத்திய அரசிடம் இருந்து நிவாரண உதவிகளும், ஒடிசா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும் அளிக்க பிரதமர் மோடியிடம் நவீன் பட்நாயக் கோரிக்கை விடுத்தார். பின்னர், பேட்டியளித்த நவீன் பட்நாயக் , ‘‘பானி புயலால் ஒடிசா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்தார். பின்னர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் நவீன் பட்நாயக் சந்தித்துப் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close