[X] Close

காணாமல் போன விமானப்படை விமானம்: நொறுங்கி விழுந்த பாகங்கள் அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிப்பு


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 16:17 pm
  • அ+ அ-

காணாமல் போன இந்திய விமானப்படை விமானத்தின் உடைந்த பாகங்கள்  அருணாச்சல பிரதேசத்தில் இன்று கண்டுபிடிக்கப்பட்டன.

அசாம் மாநிலம், ஜோர்கட் நகரின் புறநகரில் உள்ள ரோவாரியா விமானத் தளம் இங்கிருந்து கடந்த வாரம் அருணாச்சலப் பிரதேசம், மெச்சுகா விமானத் தளத்துக்கு, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஐஏஎப் ஏஎன்-32 ரக விமானம் 13 பேருடன் புறப்பட்டது.

ஆனால், 12.25 மணிக்கு புறப்பட்ட விமானம் கடந்த 2 மணிநேரமாக அருணாச்சலப் பிரதேசத்தின் மெச்சுகா விமானத் தளத்துக்குச் சென்று சேரவில்லை. இதுதொடர்பாக மெச்சுகா விமானத் தளத்துக்கு தொடர்பு கொண்டுகேட்டபோதும் விமானம் குறித்து தகவல் ஏதும் இல்லை.

இந்த விமானத்தில் 5 பயணிகளும், 8 விமானப்படை வீரர்களும் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெச்சுகா விமானப்படைத் தளம் சீனாவின் எல்லை அருகே அமைந்துள்ளது. விமானம் குறித்த எந்தத் தகவலும் இல்லை என்பதால், விமானத்தைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

விமானப்படையின் சுகோய்-30, சி-130 ரக விமானங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. இந்தநிலையில், விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அருணாச்சல பிரதேச மாநிலம், சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகே இன்று உடைந்த நிலையில் விமானத்தின் பாகங்கள்  கண்டுபிடிக்கப்பட்டன.

அப்பகுதியில் எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டரின் உதவியுடன் விமானப்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏ.என்.32 ரக விமானத்தின் உடைந்த பாகங்கள் இருப்பது தெரிய வந்தது. விமானத்தை பற்ற துப்புக் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என விமானப்படை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close