[X] Close

பெங்களூரு நகைக்கடையில் பல கோடி ரூபாய் மோசடி: தற்கொலை செய்வதாக அதிபர் வீடியோ வெளியீடு; 3000-ம் பேர் புகார்


3000

  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 15:30 pm
  • அ+ அ-

பெங்களூருவில் முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் நபர் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீடியோ வெளியிட்டதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நகைக்கடை அதிபரான அவர் மீது 3000 பேர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

பெங்களூரு சிவாஜிநகரில் மன்சூர்கான் என்பவர் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நகை சீட்டு நடத்தியுள்ளார். இங்கு பணம் முதலீடு செய்யும் நபர்களுக்கு அதிக வட்டி தரப்படும் என்றும், பணத்திற்கு வட்டியுடன் சேர்த்து தங்க நகைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மன்சூர்கான் நடத்தி வரும் நகைக் கடையில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தனர்.

கடந்த 4 நாட்கள் கடை திறக்கப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் சந்தேகம் அடைந்தனர். இந்தநிலையில்ல மன்சூர்கான் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவியது. அதில் ‘‘வாடிக்கையாளர்களிடம் பெற்ற தொகையில் ரூ.400 கோடியை காங்கிரஸ் எம்எல்ஏ ரோஷன் பெய்க்கிடம் கொடுத்தேன். அவர் பணத்தை திருப்பி தர மறுக்கிறார்.

ima.JPG 

எனக்கும், குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார். வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்கொலை செய்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மன்சூர்கான் தலைமறைவாகி விட்டதாக தகவல் பரவியதால் சிவாஜிநகரில் உள்ள நகைக்கடை முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். மேலும் காவல்துறையினரிடமும் புகார் அளித்துள்ளனர். 300 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.500 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

மன்சூர்கான் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸார் ஏதும் தெரிவிக்கவில்லை. அதேசமயம் அவர் குடும்பத்துடன் துபாய்க்கு தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மன்சூர்கானின் குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்எல்ஏவான ரோஷன் பெய்க் மறுத்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close