[X] Close

ஐஎம்ஏ நிறுவனம் ரூ.400 கோடி பண மோசடி; பெங்களூருவில் அலுவலகத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்


400

  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 07:49 am
  • அ+ அ-

பெங்களூருவில் ஐஎம்ஏ நிதி நிறுவனம் ரூ.400 கோடி வரை பண மோசடி செய்ததாகக் கூறி, அதன் வாடிக்கையாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூருவில் உள்ள‌ சிவாஜி நகரில் ஐஎம்ஏ நிதி நிறுவனம் மற்றும் நகைக் கடை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் முகமது மன்சூர் கான் குறுகிய காலத்தில் அதிக வட்டி தருவதாகக் கூறி வாடிக்கையாளர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துள்ளார். சுமார் 400 கோடி ரூபாய் வரை பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் கடந்த சில வாரங்களாக தலைமறைவானதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, 500-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நேற்று ஐஎம்ஏ நிறுவனத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பெங்களூரு மாநகர துணை ஆணையர் ராகுல் குமார், வாடிக்கையாளர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தார்.

இதுகுறித்து கமர்சியல் தெரு போலீஸார் முகமது மன்சூர் கான் மீது பணம் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான அவரை தேட பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சுனில் குமார் தனிப்படை ஒன்றையும் அமைத்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close