[X] Close

ஊழல் புகாரில் 123 அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அரசின் அனுமதி கேட்டு ஊழல் கண்காணிப்பு ஆணையம் காத்திருப்பு


123

  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 07:34 am
  • அ+ அ-

ஊழல் புகாரில், 123 அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அரசின் அனுமதி கேட்டு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) 4 மாதங்களுக்கும் மேலாக காத்துள்ளது.

இவர்களுக்கு எதிரான 57 வழக்குகள் அரசின் பல்வேறு அமைப்புகளின் அனுமதிக்காக நிலுவையில் உள்ளதாக சிவிசி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளில் பணியாற்றுவோர், ஐஏஎஸ் அதிகாரிகள், உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளும் இதனால் நிலுவையில் உள்ளன. மேலும் பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் பணியாற்றும் 45 பேருக்கு எதிரான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இதில் அதிகபட்சமாக, மத்திய பணியாளர் நலத்துறையின் அனுமதியை பெறுவதற்காக 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து ரயில்வே அமைச்சகம் மற்றும் உத்தரபிரதேச அரசின் அனுமதி கிடைக்காமல் தலா 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் வரை புதுப்பிக்கப்பட்ட இந்த புள்ளிவிவரப்படி, சிபிஐ கூடுதல் எஸ்.பி. ஒருவர், அமலாக்கத் துறை துணை இயக்குநர் மற்றும் வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் தொடர்புடைய வெவ்வேறு வழக்குகளும் அனுமதிக்காக காத்துள்ளன.

பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் வங்கி, சிண்டிகேட் வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகியவற்றின் 45 ஊழியர்கள் தொடர்புடைய 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், ஆந்திரா, இமாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநில அரசுகளின் ஊழியர்கள் தொடர்பான தலா ஒரு வழக்கு இந்த மாநில அரசுகளின் அனுமதிக்காக நிலுவையில் உள்ளது.

விதிமுறைகளின்படி, அனுமதி அளிப்பது தொடர்பான முடிவை 4 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட துறைகள் அல்லது அமைப்புகள் எடுக்க வேண்டும். ஆனால் இந்த வழக்குகளில் 4 மாதங்களுக்கும் மேலாக முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close