[X] Close

தலைவர்கள் மீதான புகார்: தேர்தல் ஆணையம் மறுப்பு


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 07:33 am
  • அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகார் பற்றிய தகவல்களை வெளியிட தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி மற்றும் சில கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக புகார்கள் எழுந்தன. பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் விதிகளை மீறவில்லை என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தெரிவித்தது. இந்நிலையில், இந்தப் புகார்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் பத்திரிகையாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்தார்.

மோடி மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மீதான புகார்கள் அதுதொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மனுதாரர் கோரியிருக்கும் பிரிவின் கீழ் தகவல்களை அளிப்பது தனது அதிகாரத்துக்கு உட்பட்ட வகையில் சரியல்ல என்று தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. மேலும், மோடி மீதான விதிமீறல் புகார் பற்றிய தேர்தல் ஆணையத்தின் முடிவில் இரு தேர்தல் ஆணையர்களில் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து எழுதிய குறிப்பின் நகலையும் தர முடியாது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close