[X] Close

பள்ளி, கல்லூரி பாடத் திட்டத்தில் யோகா பயிற்சி: மத்திய அமைச்சர் தகவல்


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 07:27 am
  • அ+ அ-

பள்ளி, கல்லூரி பாடத் திட்டத்தில் யோகா பயிற்சியை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய ‘ஆயுஷ்’ துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலம் பனாஜியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய ‘ஆயுஷ்’ துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் பேசியதாவது:

யோகாசனப் பயிற்சி செய்வதன் மூலம் மக்கள் ஆரோக்கியமாக நோயின்றி வாழ முடியும். மாணவர்களிடையே யோகா பயிற்சியை ஏற்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் யோகா பயிற்சியை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி பாடத்திட்டத்தில் யோகா பயிற்சியை சேர்க்கக் கோரி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உடற்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் இதற்கு ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு, 2020-21 கல்வியாண்டில் பாடத்திட்டத்தில் யோகா பயிற்சி சேர்க்கப்படும்.

வரும் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் முக்கிய விழா நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். பல்வேறு யோகா நிபுணர்கள் வெளிநாடுகளின் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர். சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் நாடுகளின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு ஸ்ரீபாத் நாயக் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close