[X] Close

தேர்தல் தோல்வி குறித்து டிடீபி மூத்த நிர்வாகிகளுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 07:29 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடந்தது. இதில் ஆளும்கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் (டிடீபி) படு தோல்வி அடைந்தது. இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, விஜயவாடாவில் உள்ள தனது வீட்டில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் புதிய அரசின் நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், அவர் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது, “தேர்தல் தோல்வி குறித்து மாவட்ட ரீதியாக ஆலோசனை நடத்த வேண்டும். சட்டப்பேரவையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் கட்சி எம்எல்ஏ.க்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். தேர்தல் தோல்வியில் துவண்டு விடாமல் இருக்குமாறு தொண்டர்களுக்கு அந்த மாவட்ட தலைவர்கள் மூலம் ஆலோசனை வழங்க வேண்டும்” என்றார்.

ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சந்திரபாபு நாயுடு, “மறைந்த நடிகர் கிரீஷ் கர்னாட் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். இதேபோல தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவும், நடிகர் கிரீஷ் கர்னாட்டின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close