[X] Close

தமிழகம் உட்பட 5 மாநில ஆளுநர்கள் டெல்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு


5

  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 06:49 am
  • அ+ அ-

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உட்பட 5 மாநில ஆளுநர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர்.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மாநில ஆளுநர்கள் மாற்றப்படுவது வழக்கம். அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இதன்காரணமாக தற்போதைய ஆளுநர்களே தொடர்ந்து பதவியில் நீடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஆந்திரா-தெலங் கானா ஆளுநர் நரசிம்மன், ஜார்க்கண்ட் ஆளுநர் திரவுபதி முர்மு, அருணாச்சலபிரதேச ஆளுநர் பி.டி.மிஸ்ரா, மேற்குவங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதி ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து எடுத்துரைத்ததாகக் கூறப் படுகிறது. ஆந்திரா-தெலங்கானா ஆளுநர் நரசிம்மன், இருமாநிலங்கள் பிரிக்கப்பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைக் கூறினார். மேலும் இரு மாநிலங்களுக்கும் தனித்தனி ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று அமித் ஷாவிடம் அவர் பரிந்துரை செய்தார்.

இதேபோல ஜார்க்கண்ட், அருணாச்சல பிரதேச ஆளுநர்களும் தங்கள் மாநில அரசியல் நிலவரம் குறித்து எடுத்துரைத்தனர். மேற்குவங்கத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து அந்த மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதி, அமித் ஷாவிடம் விரிவான விளக்கம் அளித்தார். மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த அவர் பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close