[X] Close

மலைப் பகுதிக்கு ரத்த மாதிரியை சுமந்து சென்ற ஆளில்லா விமானம்


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 10:53 am
  • அ+ அ-

உத்தராகண்ட் மலைகள் நிறைந்த மாநிலம் ஆகும். இதனால் பிற இடங்களுக்கு செல்வது மிகவும் சிரமமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக மருத்துவ சிகிச்சைக்காகவோ, மருந்துகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அவசரமாக எடுத்துச் செல்லவோ முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், ஐஐடி மாணவர் நிகில் உபாத்யே தலைமையிலான சிடி ஸ்பேஸ் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் ஒரு ஆளில்லா குட்டி விமானத்தை (ட்ரோன்) தயாரித்துள்ளது. தொலைபேசி வழி மருத்துவ சேவை (டெலிமெடிசன்) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விமானம் சோதனை முறையில் இயக்கப்பட்டது.

இதன்படி, நந்த்கான் மாவட்ட மருத்துவமனையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டெரி கார்வால் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார மையத்துக்கு ஆளில்லா விமானம் மூலம் ரத்த மாதிரி அனுப்பப்பட்டது.

மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த அந்த விமானம், 18 நிமிடங்களில் அந்த சுகாதார மையத்தை சென்றடைந்தது. இந்த சோதனை வெற்றி பெற்றதன் மூலம், போக்குவரத்து வசதி குறைவாக உள்ள பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு இனி விரைவாக மருத்துவ சேவை வழங்க முடியும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close