[X] Close

அருணாச்சல் எம்எல்ஏ வீட்டில் இறந்த சிறுமி உடல் தோண்டியெடுப்பு


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 10:52 am
  • அ+ அ-

அருணாச்சல பிரதேசத்தின் இடாநகர் சட்டப்பேரவை தொகுதி ஐக்கிய ஜனதாதள எம்எல்ஏ டெக்கி கசோ. எம்எல்ஏவின் வீட்டில் 12 வயதான ஆதிவாசி சிறுமி கடந்த மாதம் 20-ம் தேதி மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த சிறுமியின் பெற்றோர் எம்எல்ஏவின் வீட்டில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்கள் பெண் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். சிறுமியின் உடல் லக்கிம்பூரில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

எனினும், சிறுமி மரணம் குறித்து ஆதிவாசி மாணவர் அமைப்பு சார்பில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரிக்கிறது. புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக தோண்டியெடுக்க ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த சனிக்கிழமை சிறுமியின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக லக்கிம்பூர் போலீஸ் சூப்பிரண்டென்ட் ஹரேகிருஷ்ண நாத் நேற்று தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close